• அலங்காநல்லூர் முதல் சென்னை வரை



                 
               அலங்காநல்லூர் முதல் சென்னை வரை 


    2௦16 டிசம்பர் இறுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இணையதளம் பேஸ்புக்,டுவிட்டர் மூலம் ஒரு சில மீம் பக்கங்கள் ஒருங்கிணைப்பாலர்கள் இணைந்து ஒரு பேரணி மெரீனாவில் ஜனவரி 8 நடத்த போவதாக அறிவித்தனர் .இந்த அறிவிப்புக்கு இளைஞர்கள் பெரும் ஆதாரவு தெரிவித்தனர். பேரணியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும்,நாட்டு மாடுகள் அழிவதை தடுக்க வேண்டும் என்பதே ஒரு பிரதான விஷியம் ஆகா இருந்தது.இதில் 20,000 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இதுவே இந்த அறப் போராட்டத்திற்கு விதை. இந்த பேரணி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தது.ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் அவசர தீர்ப்பு 5 நாட்களுக்குள் கொடுக்க முடியாது என்று சொல்ல இந்த போரட்டத்தின் விதை துளிர்விட ஆரமித்தது.மாட்டு பொங்கல் அன்று சில இடங்களில் தடை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி,ஜல்லிக்கட்டு நடத்த பட்டது போன்ற தகவல் இளைஞர்களிடம் பகிர பட்டது. காணும் பொங்கல் ஜனவரி 16 அன்று ஹிப் ஹோப் தமிழன் ஆதி, கார்த்திகேயன் சிவசேனதிபதி தலைமையில் ஒரு பேரணி அலங்காநல்லூரில் நடப்பதாகவும் அனைவரும் அலங்காநல்லூர் வர வேண்டும் என்று இணையத்தில் தகவல் பகிரப் பட்டது. இதை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அங்கு ஒன்று சேர்த்தனர்.அந்த பேரணி தொடர்ந்து மக்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட அதை ஆதரித்து பலர் அங்கே சென்றனர் ஆனால் போலீஸ் பாதுகாப்பை  கடந்து அங்கு செல்ல முடியவில்லை. இதன் விளைவு ஆதரவு பெருகியது. அன்று இரவு  2௦௦ மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது. இவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து சென்னை மெரினாவில் அறப் போராட்டம் ஜனவரி 17 காலை நடத்த போவதாக முடிவு செய்த மீம் பக்கங்கள் அட்மின்கள் ஒரு பதிவை தங்கள் பக்கங்களில் பதிவு செய்தனர். ஜனவரி 17 காலை சுமார் 1௦௦ பேருடன் தொடங்கிய போராட்டம் மாலை 5௦௦௦ மேற்பட்டோர்கள் இணையத்தின் மூலம் இணைந்தனர். அவர்கள் கோரிக்கை கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்ய வேண்டும் , ஜல்லிக்கட்டு சட்ட ரீதியாக எந்த தடை இன்றி நடத்த வேண்டும் என்பதே ஆகும். அன்றே அவர்களுக்கு நடிகர் ஆரி ,ஹிப் ஹோப் தமிழா ஆதி ,நடிகர் லாரன்சு, பாலாஜி  என பிரபலங்கள பலர் ஆதரவு தெரிவித்தனர்.இந்த அறப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறியது.”வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் போக மாட்டோம்” என்று போராட்டத்தை ஒரு படி மேலே எடுத்து சென்றனர். ”ஜல்லிக்கட்டு சட்ட ரீதியாகவும், பீட்டா அமைப்பு தடை செய்ய வேண்டும், மிருக வதை தடுப்பு சட்டம்  சீர்திருத்தம் செய்ய வேண்டும் “ போன்ற கோரிக்கை முன் வைக்க பட்டது.இரண்டாம் நாள் பள்ளி கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.பகலில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மெரினா இரவிலும் ஜொலித்தது.விவேகானந்தர் இல்லம் எதிரில் தொடங்கி போராட்டம் மெரினாவை கைபற்றியது.


    நடிகர் லாரன்ஸ் மற்றும் பலர் ,போராடும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்தனர்.ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டது.இதை தொடர்ந்து குடும்ப பெண்கள்,வேலை செல்லும் பலர் கலந்து கொள்ள ஆரமித்தனர். பெண்களை இழிவு படுத்தும் பிற இடங்களை காட்டிலும் இங்கு பெண்கள் பாதுகாப்புடன் இருந்தார்கள் .மறுநாள் பள்ளி, கல்லூரிகள் ஞாயிறு விடுமுறை என்று பல இடங்களில் அறிவிக்கபட்டது. சென்னை தொடர்ந்து நாட்டின் பல மாவட்டங்களில் போராட்டம் ஆரமித்தது. சென்னை போக்குவரத்து கழகம் ,வணிகர் சங்கம் என்று பல அமைப்புகள் இந்த போராட்த்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.


    இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து தமிழன் என்ற உணர்வு ஒன்றே அவர்கள் மனதில் நின்றது. பகலில் போராட்டத்திற்கு கோஷம் போடுவதும் மாலை முதல் காலை வரை மக்கள் தங்கள் உணர்வுகளை பதிவு செய்யும் ஒரு களமாக மாறியது.
    குழந்தைகள் முதல் முதியவர்கள் தங்கள் கருத்துகளை,உணர்வுகளை பதிவு செய்தனர். இதில் கருத்துகள் சில மத்திய அரசு ,மாநில அரசு மீதான கோபம்,ஆதங்க போன்றவை 1௦% சதவிதம் இருந்தாலும்,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலைப்பு அதிகம் இடம் பெற்றன.அதில் அதிகம் பேசப்பட்டது விவசாயம் மற்றும் ஜல்லிக்கட்டு மட்டுமே. ஜல்லிக்கட்டு தடையால் நாட்டு மாடுகள் அழிவும் அதை சுற்றி நிகழும்  கார்பரேட் பால் வர்தகம், பீட்டா அமைப்பின் ஆதிக்கம் தெளிவாக எடுத்து உரைக்கப்பட்டது. பெப்சி ,கோக் போன்ற அமெரிக்க நாட்டு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் இந்திய உற்பத்தியாளர் பொருட்கள் வாங்குவோம் என்று பலர் உறுதி மொழி எடுத்து கொண்டறனர்.   


    இந்த போராட்டம் எந்த ஒரு அரசியல்வாதிகள், நடிகர் தலைமையில் நடை பெறாததே சிறப்பு. இந்த போராட்டத்தை பலர் ஆதரித்து வந்து பேசினாலும் யாரையும் தலைவராக மாணவர்கள், மக்கள் ஏற்க்கவில்லை.மாணவர்கள் மக்கள் எந்த ஒரு பாகுபாடு இன்றி அனைவருக்கும் உதவி செய்ததும்  , போக்குவரத்து இடையூர் இல்லாமல் தானாக முன் வந்து போக்குவரத்து சரி செய்யும் பொறுப்பை ஏற்று கொண்டனர். மக்கள் சமூகத்தில் சமத்துவமாக வாழ்ந்ததே இந்த 7 நாட்கள் தான்.அசதி மறந்து உறங்க பஞ்சு மேத்தைகள் இல்லை,சரியான கழிப்பறைகள் இல்லை என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு,எந்த உணவாக இருந்தாலும் சரி போராட உடம்பில் சக்தி வேண்டும் என்று ஒரு சமத்துவமானா வாழ்க்கை. பாரதி, விவேகானந்தர், அப்துல் கலாம், நம்மாழ்வார் கண்ட புரட்சி,கனவு நினைவானது.  


    இந்த போராட்டம் தமிழன் உரிமை என்பதை கடந்து நாளை எம் மக்கள் சுகாதாரமானா வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் பலர் மனதில் உதித்தது.


    இதில் சில மக்கள் அரசின் மீது உள்ள ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார். மோடிக்கு பாடை கட்டியும் ,பன்னிர் செல்வம் அவர்கள் மிச்சர் சாப்பிடுவது போன்றும் சித்தரிக்கப்பட்டது. சில கோஷங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் உடன் வந்தவர்களை முகம் சுளிக்கும் விதத்தில் அமைந்தது.இருப்பினும்கூட மக்கள் தாங்கள் ஒன்று சேர்ந்தது எதற்கோ அதை நோக்கியே தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
    போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் மற்றும் அமைதியாக முடிய வேண்டும் என்பதே நோக்கம் ஆனால் சில சமூக விரோதிகள் செய்த செயல் மாணவர்கள் மீது பழி சுமத்தி அழகு பார்த்தனர் ஆனால் வாய்மை வெல்லும் என்பதற்கு ஏற்றார் போல் ஊடகம் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று ஒப்பு கொண்டது. இதன் முடிவில் கிடைத்த வெற்றி மாணவர் பெற்று தந்தது என்று அனைவராலும் பேசபட்டது .


    இந்த போராட்டத்தில் பலரின் விருப்பம் மாணவர்கள் அரசியலில் வரவேண்டும், அரசியல் பற்றி விழிப்புணர்வு வேண்டும் ,நல்ல தலைவர்கள் வேண்டும் ,நல்ல ஆட்சி வேண்டும் ,அடிமைதனம் இல்லாத அமைச்சர்கள்,மந்திரி வேண்டும்,விவசாயம் அழிய கூடாது,இந்த மாணவர்கள் குரல் சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் வேண்டும்,இந்த ஒற்றுமை உடைந்து விடாமல் இருக்க வேண்டும் என பல பேசப்பட்டது.


    இந்த மாணவர்கள் எழுச்சி தமிழ் நாட்டில் பெரும் வெற்றி உலகத்தையே வியந்து பார்க்க பட்டது. ஒரு தமிழனாக கர்வத்துடன் இந்த வெற்றியை என் சகோதரர்கள்,சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைபடுகிறேன்

    -மணிகண்டன் அண்ணாமலை 

          
      
                     

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக