• தமிழனும் இனி மெல்ல சாவான்

    தமிழனும் இனி மெல்ல சாவான்

    “தமிழ் இனி மெல்ல சாகும்” என்று பாரதி சொன்ன வாக்கியம் இப்போது ஒரு படி மேல் சென்று தமிழனும் இனி மெல்ல சாவான் என்ற நிலை வந்து விட்டது. உண்மை இது தான். நம் பாரத நாடு ஒரு பக்கம் புரட்சி என்ற பெயரில் உயர்ந்த மதிப்பு நோட்டுகள் செல்லாது என சொல்லி மக்கள் இயல்பு வாழ்கையில் கும்மி அடித்தது.
    இதற்கு முடிவுக்கு  காரணம் கேட்டால்
    v  கருப்பு பணம் ஒழிபதற்கு
    Ø  கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது என்பதிற்கு பதில் இல்லை
    Ø  இதை எதிர்க்கும் காங்கிரஸ் உழலில் புகழ் பெற்றவர்கள் தான்
    Ø  செல்வாக்கு உள்ளவர்கள் வீடு தேடி செல்லும் புதிய காசுகள்

    v  சீனா பொருட்கள் எதிர்பதற்கும் அவர்கள் பொருளாதார ஊடுருவல் தடுக்க
    Ø  பணம் பரிவர்தனை செய்ய paytm பயன்படுத்திகொள்ளுங்கள் என்கிறார்கள் paytm சீனா முதலீடு நிறுவனம் என்பது யாருக்கும் தெரியும் 
    v  சொன்ன தேதியில் எதுவும் நடக்கவில்லை  
    Ø  5௦௦ நோட்டுகள் பதில் 2௦௦௦ நோட்டுகள் அதிக அளவில் புழக்கம்
    Ø  அதுவும் 2௦௦௦ ரூபாய்க்கு மேல் எடுக்க முடியவில்லை
    Ø  5௦ நாட்கள் பிறகும் எடுக்க முடியவில்லை
    Ø  புது வருடம் புதிய இந்தியா இதுவும் நடக்கவில்லை
    Ø  அதிகம் பணம் டெபொசிட் செய்த நபர்கள் விவரம் இன்னும் வெளிவரவில்லை
    Ø  கருப்பு பணம் எவளோ வந்தது என்ற தகவல் வெளியிடவில்லை

    இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இது மத்திய அரசு மக்களுக்கு செய்த நற்செயல்கள். இதை தாண்டி தமிழனுக்கு செய்த செயல்கள்
    v  முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரண நாடகம் பிஜேபி துணை இல்லாமல் இது சாத்தியம் இல்லை .
    v  சசிகலாவை  ஆதரித்தது.
    v  இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது
    v  சல்லிகட்டு தடை செய்தது
    v  தமிழ் மீனவர்கள் பிரச்சனை
    v  மத கலவரம்

    இன்னும் பல.....

    சரி தமிழகம் நிலை என்ன என்று பார்த்தால்
         5௦ வருட வேற்று மொழியாளர்கள் ஆட்சி முடிந்தது , குடும்ப அரசியல் முடிந்தது என்று நினைத்த மக்கள் ஒ.பன்னிர்செல்வம் முதல் அமைச்சர் என்ற ஒரு சந்தோசம்.இது 1௦ நாட்கள் கூட நிலைக்கவில்லை அதிமுக பொது செயலாளர் பொறுப்பை வீ.கே.சசிகலா ஏற்று கொள்ள வேண்டும் என்ற சில அமைச்சர்கள் கூற.அதை ஏற்று கொண்டார் சசிகலா.இன்று சசிகலா முதல் அமைச்சர் ஆகா வேண்டும் என்று தம்பி துறை என்ற அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்
    அது எப்படி மக்கள்  ஏற்றுகொள்வார்கள் ?
    யார் இந்த சசிகலா என்பதற்கு இணையத்தில் ஆயிரம் காணொளி இருக்கிறது. உழல் செய்து சிறை சென்றவர்,தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கையப்பம் இட்டவர்,44 கம்பெனிக்கு பினாமி,குடும்பம் முழுவதும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தை சுரண்டியவர்கள்.ஆட்சியில் இல்லாத நிலையில் ஒரு மாபியா போல் கொள்ளை அடித்த இந்த மன்னார்குடி குடும்பம் பதவிக்கு வந்தால் ? ஓட்டு போட்ட மக்கள் நிலைமை ஒரு கேள்விகுறி தான். இதை யார் கேட்பது ? கேட்டால் விடு விட்டுவிடுவார்களா ?
    மீண்டு தமிழகம் ஒரு மாபியா குடும்ப ஆட்சியில் சிக்கி சிதைய காத்து இருக்கிறது.இதை என்ன என்று சொல்லுவது. தமிழன் நிலைமை மிகவும் மோசமான நிலைமை.எந்த ஒரு ஆளுமை,படிப்பு தகுதி இல்லாதவர்கள் ஆட்சி செய்ய படித்தவன் வேடிக்கை பார்க்கும் நிலைமை.

    சசிகலா பற்றி காணொளி










    இன்னும் பலர் தன் மனதில் உள்ள கோபம்,ஆதங்கம் எதோ ப்ளாக் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள். இதை அவர்கள் அரசியல் சென்று சொல்லவும் முடியாமல் செய்யவும் முடியாமல். இங்கு அரசியல் செய்வது பணம்,சாதி பலம் கொண்டவர்கள் மட்டும் தான் .
    தமிழன் நிலைமை இனி என்ன நடக்குமோ என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும்       
             
         


    காணொளிகள் அறப்போர் இயக்கம் வெளியிட்டது 








0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக