• வரம்பு

    வரம்பு

    நான்  நான்  நான்
    என்ற சுயநலம் கடந்து
    பிறர் நலம் சிந்தித்தது
    வருந்துவது ஏனோ

    எனக்கு என்ற உலகம்
    உடைய கண்டேன்
    என்னை மாறுபட்டு
    காண ஆசைப்பட்டேன்
    விதியின் சுழற்சியில்
    சிக்கினேன்

    தேவை  தேவைஇல்லை
    நான் இது தான் என்ற
    பிம்பம் மறந்தது
    தேடினேன் தேடினேன்
    சில இரவுகள்
    உறங்காது தேடினேன்
    சுற்றம் வியந்து பார்த்தது

    தேடல் முடிவுற
    நான் என் வரம்பு கோட்டிற்கு
    வெளியே என்னை தேடி
    கொண்டு இருக்குறேன்

    நான் யார் என்று
    மீண்டும் மனம்  கேட்டது
    பிம்பம் முன் நின்றது
    சரி செய்
    மீண்டும் ஒரு புது
    வலி வேண்டாம்
    காதல் தரும் வலி விட
    நட்பு தரும் வலி அதிகம்
    உன்னை சரி செய்து கொள்ள
    உன் வரம்பு இது தான்

    -மணி






0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக