பொய்யான உலகில்
மெய்யான் மனிதர்கள்
தேடி துவண்டு
போன தருணங்கள்
பிறர் உழைப்பை
ஏமாற்றி
அந்த வெற்றியின்
முகத்திரையில்
வாழும் சிலர்
நேர் பட பேசவும்
தெரியும்
புறம் பேசவும்
தெரியும்
எங்கும் உண்மையாய்
பேசுவது இல்லை
தன் சுயம்
மறைத்து
பொய் கால் குதிரை
நானும் குதிரை
என்ற
வேஷம் வேண்டாம்
நம்பிக்கை வைப்பது
தவறு இல்லை
யார் என்று
முகம் தெரியாமல்
வைப்பது தவறு
உறவுகள் என்ற பெயரில்
ஒரு கூட்டம்
நண்பர்கள் என்று
ஒரு கூட்டம்
நிழல் மீது
நம்பிக்கை வைத்தால்
இருளில் பிரிந்து
விடும்
நரிகள் தந்திரம்
கொண்டு வெல்லவில்லை
தன்னை ஏமாற்ற
மாட்டார்கள்
என்ற நம்பிக்கையில்
விட்டு கொடுகின்றார்கள்
வானில் இருக்கும்
மேக கூடங்கள்
மத்தியில்
தனி ஒரு கார் மேகம்
காற்று போல
சில மூடர்கள்
முகத்திரை கொண்டு
விதியின் சூழ்ச்சி என்று
நகர்த்தி செல்லும்
வேலையில்
தனித்துவம் கொண்டு
தகர்த்து நில்
நீ யார் என்று
உனக்கு புரிந்தால்
நீ தனிப்பட்டு
நிற்கலாம்
வாழ்க்கையின் சூட்சமம்
கற்று கொள்ளும் காலம்
-மணிகண்டன் அண்ணாமலை
0 கருத்துக்கள்: