• நட்புக்குள்ளே


    "நட்புக்கு எல்லை  இல்லை " "நட்பு தான் இந்த உலகில் சிறந்த உறவு " போன்ற வரிகள் நட்பின் பெருமையை சொன்னாலும் ஒரு சிலர் மட்டும்  குழந்தை பருவம் முதல் வாழ்வு முடியும் வரை  நண்பர்களாக  இருகின்றனர்.
    "நட்பு....  நட்பு.... " என்று சொல்லும் பலர் ஏன் தன் நட்பின் உறவை தன் வாழ்க்கை முடியும் வரை எடுத்து செல்வதில்லை . ஒருவன் பள்ளி பருவம் முதல் முடியும் வரை பள்ளி நண்பர்கள்  தான் எனக்கு முக்கியம் பின் கல்லூரி வந்த அவர்கள் பள்ளி நட்பை மெல்ல விழுங்கும் கல்லூரி நட்பு பின்பு பணிபுரியும் இடம் தன் சூழலுக்கு ஏற்றார் போல நட்பு வட்டாரங்கள் மாறும் . இது இயல்பு  ஆனால் தன் நண்பர்களை மறவாது  இருப்பது நல்லது .


    நட்புக்கு கூட புரிதல் என்ற ஒன்று வேண்டும். "நீ என் நண்பன்  நீ என்னை போல் தான் இருக்க வேண்டும்
    நான் சொல்லுபவர்களுடன் தான் பேசவேண்டும் ,என்னை கேட்டு தான் எல்லாம் செய்ய வேண்டும் " என்று  சொன்னால் அது முதல் முட்டாள்  தனம்
    ஒவ்வொருக்கும் ஒரு நட்பு வட்டாரம் இருக்கும் அதில் நீங்களும் ஒரு நபர் அவளவு தான் அவர்களுக்கு  நீங்கள்   எஜமானும் இல்லை அவர்கள்  உங்களுக்கு  அடிமையும் இல்லை .அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட சுதந்திரம் உண்டு அவர்களுக்கு விருப்பம் ஆசை என்று ஒன்று இருக்கும்   அதுக்கு இடையுறாக உங்கள்  நட்பு இருக்ககூடாது .

    ஒருவன் தான் பழகிய நண்பன் பற்றி புறம் பேசுகிறான் என்றால் அவன் தன் நண்பனை புரிந்து கொண்டது மிக குறைவு அல்ல அவன் அவர்களை புரிந்து கொள்ளவில்லை.நண்பன் அவனிடம் கோவமாக பேசினால் அல்லது சண்டை போட்டான் என்றல் சூழ்நிலை அவனை பேச வைத்து இருக்கும் என்ற புரிந்து
    கொள்ள வேண்டும் அதை புரிந்து கொள்ளாமல் அவன் மேல் கோவம் அவன் பேசும் வரை பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஒரு வகையான முட்டாள் தனம் .

    வட்டாரம் மாற மாற நண்பர்கள் அவர்கள் தேவைக்கு ஏற்ப பயன் படுத்தி கொள்ளபவர்கள் உண்டு
    அது இயல்பு  . தன் நண்பர்களுக்கு  முன்னுரிமை என்ற ஒன்று வரும் அதில் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல மாறும் .சூழ்நிலை ஒருவரை முக்கியம் என்று தோன்ற வைத்து இருக்கும் .

    சூழ்நிலை ஏற்றார் போல் நண்பர்கள் புரிந்துகொள்வது தான் சிறந்த நட்பு
    எதையும் எதிர் பாராமல் செய்வதும் நட்பு .

     -மணி 

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக