காதலர் தினம் பிப்ரவரி 14
வருடங்கள் சேகரித்து
வார்த்தைகள் கோர்த்து
பரிசுகள் தேர்ந்தெடுத்து
மனம் திறந்து
சொல்லும் காதல்
என் காதல் அல்ல
உன்னை ஒரு நாள் பார்த்தேன்
உன் அழகில் விழுந்துவிட்டேன்
நீ இல்லாமல் நான் இல்லை
என்று சொல்லும் காதல்
என் காதல் இல்லை
யார் நீ
நான் யார்
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது
உன் அருகில் நான்
மழலைகள் பள்ளியில்
பருவ மாற்றம்
நெகிழ்திற கயிற்றுப்பிடியில்
நெருங்கிய நட்பு
காதல் வந்தது எப்படி
யோசிக்க மறந்தேன்
பார்க்காமல் வருடங்கள் கடந்தாலும்
காதல் என்று கூட சொல்ல
இயலாமல் தவித்தேன்
உன்னை ஒரு நாள் பார்ப்பேன்
ஏக்கம் ...ஏமாற்றம்...
கனவில் பார்த்து
யதார்த்தத்தில் தேடி
அருகில் இருந்து
உன்னை ரசித்து
உன் பேச்சில் கிளிபிள்ளை
போல் கேட்டு
உன் நகை போதும்
என் உலகம் மறக்க
என் காதல் என் உலகில் மட்டும்
சொல்ல பயம் இல்லை
தயக்கம் இல்லை
சொல்லா காதல் தரும் சுகம்
சொல்லியபின்பு மறைந்து
விட கூடாது
என் காதலை தள்ளி வைத்து
என் காதலையும்
என் காதலியும் ரசிக்கும்
என் மனம் அதிர்ஸ்டசாலி
என்றும் சொல்லாமல்
காதலோடு வாழும்
எனக்கு
காதலர் தினம் என்ற
ஒரு நாள் போதாது
- மணி
அருமை அருமை