அதிவேகமாக சுழலும் பூமியில் மக்களும் ஒரு எந்திரம் போல
வாழ
வாழ்கையின் முக்கியத்துவும் கூட
தெரியாது வாழும் இளமை பருவம்
பள்ளி பருவம் ஒரு பொக்கிஷம் .அந்த
பொக்கிஷம் அனைவருக்கும் கிடைக்காது .
கணேஷ்
9 ஆம் வகுப்பு மாணவன் ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறான் .பயந்த சுபாவம் கொண்டவன்
. தந்தை சிறு வயதில் தவறி விட்டார் .தந்தை ஒரு
அரசு நிறுவனதில் வேலை பார்த்தார். வேலையில் இருக்கும் போது உயிர்
பிரிந்ததால் அந்த வேலை அவர் மனைவி செல்லம்மாள் கொடுக்கபட்டது . செல்லம்மாள் 1980ல் 12 ஆம் வகுப்பு முடித்தவள்.அவளுக்கு ஏதார் போல் ஒரு வேலை
வழங்கப்பட்டது. அம்மா செல்லம்மாளுக்கு வெளி உலகம் தெரியாது தன் மகன் வேலை
வீடு என்று வாழ்பவள் .கணேஷ் ,செல்லம்மாள் இருவரும் பாண்டிச்சேரி யில் வாழ்ந்த்தனர் .
கணேஷ்
படிப்பில் கெட்டி ,கொஞ்சம் விளையாட்டில் ஆர்வம் உண்டு .ஒரு
நாள் தூரத்து எழுத்து மங்கலாக தெரிகிறது என்றான் .மறுநாள் அவனை அழைத்துகொண்டு செல்லம்மாள்
அரசு மருத்துவமனைக்கு சென்றாள் .கணேஷ் பரிசோதித்த டாக்டர் தூர பார்வை கண்ணாடி
அணிந்தால் சரி ஆகிவிடும் என்றார் . மருத்துவர் அறிவுரை படி கண்ணடி வாங்கி
கொடுத்தாள் செல்லம்மாள் .அவனும் கண்ணாடி
அணிவது ஒரு மாறுபட்ட அனுபவம் .கண்ணாடி தனக்கு அழகு சேர்பதாக நினைத்து கொண்டான்
வருடங்கள் நகர கணேஷ் 1௦ ஆம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றான் . கணேஷ் படிப்பில்
கவனம் செலுத்த ஆரமித்தான் .மறுபடியும் அவனுக்கு தலை வலி மற்றும் கண் வலி வந்தது .
அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் செல்லம்மாள் .மீண்டும் அதே தான் சொன்னார்
மருத்துவர் .பக்கத்து வீட்டு மாமி தனியார் மருத்துவமனையில் கொண்டு
பரிசோதித்து பாருங்கள் என்றார் . ஏன் நாம் போககூடாது என்று அந்த தனியார்
மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் .அவர்கள் நெடு நேரம் பரிசோதித்து பார்த்தனர் பின்பு ஒரு
மருத்துவரிடம் அழைத்து சென்றனர் .அவர் எதோ ஆங்கிலத்தில் பேச செல்லம்மாள் புரியவில்லை கணேஷ்
மருத்துவர் சொல்லும் வார்த்தைக்கு அவனுக்கு பரிச்சியம் இல்லாத புரிந்தது போல் தலை
ஆட்டிவிட்டு வந்துடன் .
12 ஆம் வகுப்பு பொது தேர்வு நெருங்கியது
அவன் மீண்டும் அந்த வலியில் துடித்தான் செல்லம்மாள்
தேர்வு முடிந்த உடன் மருத்துவமனைக்கு அழைத்து போன்ல அப்போ தான் அவனுக்கு ஒரு அரிய
நோய் இருப்பதை அறிந்தனர் அவனுக்கு அந்த நோயின் அறிகுறிகள் அதிகம் இருந்தது அந்த
நோய் அவன் இரண்டு கண்களையும் பாதிக்கும் அபாயம் இருந்தது . அதை அந்த மருத்துவமனை சரியான முறயில்
விளக்கவில்லை அவனுக்கு தர்காலிகமாக காண்டக்ட் லென்ஸ் பயன் படுத்த சொன்னார்கள் ஒரு கண் தான் பாதிக்கபட்டு இருப்பதால் அவன் அதை
பயன்படுத்தவில்லை செல்லம்மாள் விவரம் தெரியாததால் எதுவும் சொல்லவில்லை
12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
பெற்றான் நல்ல மதிப்பெண் என்பதால் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தது அவன் வாழ்க்கையின் திருப்பு முனை அந்த கல்லூரி
வாழ்க்கை ஒரு வருடம் கல்லூரி விடுதியில் தங்கினான் பின்பு செல்லம்மாள் கணேஷ் பிரிந்து வாழ முடியாமல் தன்
வேலையை சென்னைக்கு மாற்று கேட்டு வந்து விட்டாள். கணேஷ் வாழ்க்கையின் அணைத்து
இன்பங்களும் அனுபவிக்க வேண்டும் என்பது செல்லம்மாள்யின் ஆசை அவன் இஷ்டம் போல் விடு விட்டால்
.கணேஷ்க்கு வலிகள் இருந்தாலும் சுற்றம் அவனை அதை மறகடித்தது கல்லூரி 3 ஆம் ஆண்டின்
மீண்டும் வலி அதிகம் ஆனது அவன் அப்போது தான் தனக்கு என்ன நோய் என்று தீவிரமாக
கேட்டான் .அவன் இரண்டு கண்ணிலும் நோய் வந்து விட்டதாக தெரிய வந்தது அவனால் சரியாக
பார்க்க முடியவில்லை இரவில் பார்வை ரொம்ப மோசமாகிவிட்டது.
அவன் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டது மீண்டும் மருத்துவமனை அழைத்து சென்றாள் மருத்துவர் கோபத்துடன் நான் முன்பு
சொல்லி இருந்தது போல் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் முதலில் இடது கண்ணில்
பின்பு வலது கண்ணில் செய்ய வேண்டும் என்றார்
.அவள் சேர்த்து வைத்து இருந்த தொகையில் சிறிது எடுத்து இடது கண்ணில் அறுவை
சிகிச்சை செய்தல் அவன் வலியில் துடித்ததை விட செல்லம்மாள் துடித்தாள் .கணேஷ் வழியில் துடித்தான் மூன்று மாதம் கழித்து மீண்டும் வலது
கண்ணில் அறுவை சிகிச்சை சோதனை செய்யும்
பொது அவன் அந்த நோய் பற்றி விவரம் வேண்டும் என்றான் மருத்துவர் அவனிடம் என்ன சந்தேகம்
உள்ளதோ கேள் என்றார்
கணேஷ் : இந்த நோய் என்னக்கு எப்படி
வந்தது ??
மருத்துவர் : இது யாரிடம் இருந்து
தோற்றும் நோய் இல்லை. ஆனால் ஒரு தலைமுறையில் ஒருவருக்கு இருந்தால் அந்த வம்சத்துக்கு வந்து கொண்டே இருக்கும். நீ அதிகம் கண்கள் கசக்கும் பழக்கம்
உள்ளவன் அதுவே இந்த நோய் முதல் காரணம். உன் முன்னோர்கள் யாரேனும் ஒருவருக்கு இருந்து இருக்கலாம்.
கணேஷ் : இந்த நோய் எல்லோருக்கும் வருமா
??
மருத்துவர் : இல்லை இது 1௦௦௦௦0 யில்
ஒருவருக்கு தான் வரும் நீ கவலை படதே குணாபடுத்திடலாம்
கணேஷ் :என்னால முடியல எப்போ இந்த நோய்
குணமாகும்
மருத்துவர் : இந்த ஒரு அறுவை சிகிச்சை
அப்புறம் எல்லாம் சரியாய் போய்டும்
வலது கண்ணில் அறுவை சிகிச்சை முடிந்தது
.அவன் கவலை அதிகம் ஆனது அவன் முன்பு போல் வெளிய செல்ல முடியவில்லை இதை அவன் நண்பர்கள் புரிந்து கொள்ளவில்லை அவன்
பார்வை முன்பை விட மோசமாகிவிட்டது இதை அவன் அம்மாவிடம் சொல்ல முடிய வில்லை யாரும்
இல்லா வேலையில் தனியே அழுது புலம்புவான் . அவனால் எதுவும் செய்ய முடியவில்லை அறுவை
சிகிச்சை பின் இரண்டு கண்கள் நிலைமை மோசமாகிவிட்டது பார்வை 3௦ விழுகாடு
குறைந்தது இதை அவன் அம்மாவிடம் சொல்ல முடியாமல்
சொல்ல அவள் பதறி போனால் உடனே அழைத்து சென்றாள் .மருத்துவர் இந்த முறை
செல்லம்மாள் கேள்வி கேட்டாள்
செல்லம்மாள் : என் மகனுக்கு வந்து
இருக்கும் நோய் என்னனு நான் தெரிஞ்சிக்கலாமா எனக்கு புரியும் வகையில்
சொல்லுங்கள் என்றாள்
மருத்துவர் :உங்கள் மகனுக்கு வந்து
இருக்கும் நோய் keratoconus கருவிழிக் கூம்பல் என்று சொல்லுவார்கள்
இந்த நோய் கண் பார்வை மெல்ல அழிக்கும் இதை சரியாக பார்க்காமல் விட்டால் கண் பார்வை
இழந்து விடுவர்
செல்லம்மாள் : இதற்கு தீர்வு இல்லையா ??
மருத்துவர் : ஒரே தீர்வு கருவிழி
மாற்று சிகிச்சை தான் .அதுவும் எல்லாருக்கும் செய்ய முடியாது அதற்கு நெறைய விதி
முறை இருக்கு
செல்லம்மாள் கவலையுடன் வெளிய வந்தாள் என்ன செய்வது யாரு செய்த பாவம்
என் மகனை காவு வாங்குதே . கணேஷ் சில ஆண்டு முன்னே இதை பற்றி தெரியும் சொன்னால்
அம்மா வருத்த படுவர் என்று சொல்லவில்லை .செல்லம்மாள் கணேஷை நன்றாக பார்த்துக்கு கொண்டு இருந்தாள். கணேஷ் தன்னால் அம்மாவுக்கு ஒன்றும்
செய்ய முடியவில்லை என்ற வருத்தம். அவனை நோய் முழுமையாக விழுங்கியது பார்வை
இழந்தான் .
கணேஷ் செல்லம்மாள் சோகம் சூழ்ந்தது
.செல்லம்மாள் அன்று வேலைக்கு செல்ல
வேண்டும் என்ற கட்டாயம் கணேஷ் ஒரு ஏக்கத்துடன் அம்மாவை பார்த்தன்.
கணேஷ் "இந்த உலகத்தில் நம்மால்
வாழ முடியும் ஆனால் ஒரு உயிர் உள்ள பிணம் போல் தான் வாழ வேண்டும் . நான் என்ன அம்மாவுக்கு எதுவும் செய்யவில்லை இனி நான் என்ன செய்வது" ஒரு காகிதம் எடுத்தான்
எழுதினான்
" என் அன்பு அம்மாவுக்கு
என்னை இத்தனை வருடம் கஷ்ட பட்டு வளர்த்ததுக்கு
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை நான் பட்ட துன்பம் உன்னக்கு தெரிய வேண்டாம்
என்று நினைத்தேன் விதி விடவில்லை என்னை வென்றது .நிகழ் காலம் உன் மகன் பெயர்
சொல்லும் என் உடல் உருபுகள் அனைத்தையும்
தானம் செய்து விடு இது தான் என் இறுதி ஆசை
"
உன் அன்பு மகன்
கணேஷ் "
கண்ணீருடன் அம்மா புகை படம் பார்த்து கொண்டு தனக்கு
மருத்துவர் கொடுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக அருந்தி அதில் இருக்கும் வேதியல்
அவன் உயிரை எடுத்தது அவன் இறுதி கண்ணீர் துளி வேறு ஒருவனின் வாழ்க்கையில் பட்டு
போன செடியில் ஊற்றும் அமிர்த நீர்.
விழி துளி
0 கருத்துக்கள்: