• வரம் - சிறுகதை

    வரம்

    இலட்சங்கள் தாண்டி கோடிகள் தொட காத்து இருக்கும்  சென்னை மாநகரம் மக்கள் தொகை.வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று எல்லாம் புகழப்படும் சென்னையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து மக்கள் இங்கு வந்து  வாழ்கின்றனர் . அப்படி திருச்சியில் இருந்து இடம் பியர்ந்த ஒரு  ஐயர் குடும்பம்.சென்னை வாசி தான் என்றாலும்  தங்கள் பழக்க வழக்கம் மாறாத ஐயர் குடும்பம் . தாய் விசாலாட்சி   தந்தை  லட்சுமணன் இவர்களது மகன் விக்னேஸ்வரன் (விச்சு ). லட்சுமணன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். தாய் விசாலாட்சி குடும்ப தலைவியாக வருடங்கள் கடந்தது.விசாலாட்சி ஜாதகம் மீது அதிகம் நாட்டம் உண்டு. விக்னேஸ்வரன் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் மேனேஜர் ஆக வேலை செய்து
    வருகிறார்.விக்னேஸ்வரனுக்கு மீனு என்ற மீனாட்சியுடன்  திருமணம்  முடிந்து முன்று ஆண்டுகள் ஆகிற்று இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.  மீனாட்சி ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.விசாலாட்சி ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்  தன் மகனுக்கு குழந்தை என்பது ஒரு குறையாகவே இருந்தது .
    அன்று சனிக்கிழமை விக்னேஸ்வரன் மீனாட்சி இருவருக்கும் விடுமுறை. காலை மீனு எழுந்து வீட்டை சுத்தம் செய்ய ஆரமிதாள். மாமியார் விசாலாட்சி " அம்மாடி மீனு சத்த இங்க வந்து அந்த டிவி போடு போ" என்றாள். டிவி பார்த்து கொண்டு இருக்கும் பொது வீட்டு அழைப்பு மணி ஓசை ஒலித்தது உடனே மீனாட்சி கதவை திறந்து பார்த்து "வாங்க மாமா உள்ள வாங்கோ " என்றாள் .
    விசாலாட்சி  "யார் மா வந்து இருக்காங்க  "
    மீனு "சுந்தரம் மாமா வந்து இருக்காங்க வாங்க மாமா   ".
    விசாலாட்சி "வாங்க வாங்க  நேற்று வரேன்னு சொன்னீங்க ஏன் வரலை". சுந்திரம் "திடீர்  வேலை அதான் வர முடியலை விச்சு மீனு இந்த கோவிலுக்கு போய்ட்டு வர சொல்லுங்க ரொம்ப புகழ் பெற்ற கோவில்  போய் ஒரு அரச்சன்னை செய்து பத்து பேருக்கு மதியம் உணவு அன்னதானம்
    கொடுத்துட்டு வந்த அடுத்த  முன்று மாசத்தில் குழந்தை உண்டாகும் . இந்தாங்க அந்த கோவில் அட்ரஸ் "
    விசாலாட்சி "நான் சொல்லுறேன் "
    சுந்திரம் "மீனாட்சி எங்க மா விச்சு "
    மீனு "தூங்கிட்டு இருக்கிறார் மாமா"
    சுந்திரம் "எங்க லட்சுமணன்??"
    விசாலாட்சி "அவர் நண்பரின் மகன் கல்யாணம் சேலம் வரைக்கும் போய் இருக்கிறாரு "
    சுந்திரம் "சரி நான் போய்ட்டு வரேன் சத்த வேலை இருக்கு "
    விசாலாட்சி மீனாட்சி " போய்ட்டு வாங்க "
    விசாலாட்சி "விச்சு முழிச்சிட்டன்  போல அவன குளிச்சிட்டு வர சொல்லு அவன் கிட்ட பேசணும் "
    மீனு "சரி அத்த ".

    மீனு அவர்கள் அறையில்
    மீனு "அம்மா உங்கள குளிச்சிட்டு வர சொன்னங்க உங்க கிட்ட முக்கியமான விசியம் பேசணும்மா சீக்கிரம் வாங்க "
    விச்சு "சரி நீ போய் என்னக்கு காபி போடு "
    மீனு "சரிங்க "


    வீட்டு முகப்பு அறையில்
    விசாலாட்சி "டேய் விச்சு சுந்திரம் மாமா வந்து இருந்தார் இந்த கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னார் நாளைக்கு லீவ் தன போய்ட்டு வந்துடு "
    விச்சு "ஏன் அம்மா இப்படி கோவில் கோவில் போக சொல்லுறேல் சத்த பொறுங்களேன் "
    விசாலாட்சி "அப்படி பேசாத டா மடையா ஜாதகத்தில எதோ  குறை இருக்குதாம் பரிகாரம் பண்ணனும் சரியாய் போய்டுமுனு மாமா சொன்னாக போய்ட்டு வா "
    விச்சு "சரி போறேன் "

    விச்சு செல்லில் ஒரு அழைப்பு வந்தது
    விச்சு "ஹலோ "
    "நான் தான் ரவி பேசுறேன் டா "
    விச்சு "சொல்லு டா "
    ரவி "நாளைக்கு  டிரஸ்ட் ல குழந்தை தின விழா கொண்டாடுறோம் நீ கண்டிபா வரணும் டா  "
    விச்சு "இல்ல டா நா wife கூட வெளிய போறேன்   "
    ரவி " ஈவனிங் தான் function  நீ கண்டிப்பா வர நா உனக்கு அட்ரஸ் மெசேஜ் பண்ணுறேன் "
    விச்சு "நான் try பண்ணுறேன் "
    ரவி "ஓகே  சீ யூ தேர் "


    ஞாயிற்றுக்கிழமை காலையில் விச்சு தந்தை வீட்டுக்கு வந்து விடுகிறார்
    லட்சுமணன் "டேய் விச்சு எல்லாம் எடுத்து வச்சிட்டிய "
    விச்சு "எடுத்து வச்சிட்டு இருக்குறேன் சத்த இருங்க வந்துடுறேன் "
    லட்சுமணன் "மீனாட்சி நீ ரெடி ஆகிட்டியா மா சீக்கிரம் போய்ட்டு வாங்க "
    மீனு "சரி  மாமா "
    விச்சு  "சரி அப்பா "
    லட்சுமணன் ,விசாலாட்சி "பாத்து போய்ட்டு வாங்க "
    மீனாட்சி விச்சு "சரி போய்ட்டு வரோம் "
    கோவிலில் விச்சு அரச்சன்னை கொடுத்து விட்டு அன்று மதியம் அன்னதானம் பணம் செலுத்தி விட்டு திரும்பினான் வரும் வழியில் நண்பன் அனுப்பிய மெசேஜ் வந்தது . நேரம் இருக்கிறது அந்த டிரஸ்ட் function போகலாம்னு விச்சு கேட்க  மீனாட்சி போகலாம் என்று சொன்னால் இருவரும் அந்த டிரஸ்ட்க function  சென்றனர். அங்கு இருந்த அவன் நண்பன் ரவி எதிர்பார்க்கவில்லை  திடீருன்னு இருவரும் வந்தது அவனுக்கு ஒரு
    மகிழ்ச்சி. அந்த டிரஸ்ட்யில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குகாக  நடத்தபடுகின்றன.அங்கு உள்ள குழந்தைகள் பார்த்து இருவருக்கும் குழந்தை இல்லை என்ற வருத்தம் வந்தது ஆனால் அந்த குழந்தைகள் அதை நினைவில் இருந்து அகற்றினர் . அதன் பின் அவர்கள் அங்கு இருந்த இரண்டு மணி நேரம் மகிழ்ச்சியில்  மூழ்கினர்.அங்கு இருந்து விடை பெற்ற அவர்கள் காரில் செல்லும் போது அதை பற்றி பேசிகிட்டே போனார்கள்





    முன்று மாதங்களுக்கு பிறகு
    விசாலாட்சி "என்ன பாவமோ தீட்டுனு தெரியலை  என் மகனுக்கு குழந்தை இல்லை " என்று புலம்பி கொண்டு இருக்கு வேலை செல்ல தயார் ஆகி கொண்டு இருந்த மீனாட்சி மயக்கம் போட்டு விழ விச்சு பதட்ரதுடன் வந்து
    அவளை மருத்துவமனை அழைத்து சென்றான்
    அவளை பரிசோதித்த டாக்டர் "she is pregnant" என்று சொல்ல மகிழ்ச்சியில்  அவன் பறக்க  அவன் தாய்யிக்கு  போன் செய்து சொல்லுகிறான்.அனைவரும் மகிழ்ச்சியில்  மூழ்கி நிற்கின்றனர்.

    இரண்டு மாதங்களுக்கு பிறகு

    மீனாட்சி வயறு வலி என்று சொல்ல மீண்டும் மருத்துவமனை சென்றார்கள்
    அவளை பரிசோதித்த டாக்டர் "மீனாட்சி கர்ப்ப பை பலவீனமான உள்ளது கருவை கலைப்பது நல்லது இல்லை பின்னல் அவள் உயிருக்கு ஆபத்து .இனி அவள் கருவுற்றலும் பிள்ளை பெறுவது கஷ்டம்   "
    கனத்த இதையதுடன் "சரி" என்றான் விச்சு .பின்னர் மீனாட்சியிடம் விவரம் சொல்லி சமாளித்தான் . கருவை கலைத்து விட்டு வீடு செல்லும் வரை கண்ணீர் கண்ணை விட்டு அகல வில்லை

    வீட்டை சென்று அடைந்ததும்
    விசாலாட்சி "டாக்டர் என்ன சொன்னங்க "
    விச்சு "சொல்லுறேன் உள்ள வா அம்மா "
    விசாலாட்சி  "என்ன டா சொல்லு"
    விச்சு "அவள் கருவ கலைக்க சொன்னங்க "
    விசாலாட்சி "அதுக்கு நீ என்ன சொன்ன "
    விச்சு "நா என்ன சொல்ல முடியும் அவ உயிர் தான்  என்னக்கு முக்கியம் சரினு சொல்லிட்டேன்  விசாலாட்சி "அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான் இந்த பொண்ணு வேன்னணு நீ தான் வேற ஜோசியக்காரன் கூட்டிடு போன அப்பவே வேன்னணு சொன்ன இப்படி வம்சம் போய்டுதே"
    விச்சு "அம்மா சும்மா போலம்பாதா மா அவளே மனசு உடைந்து  இருக்குற நாளைக்கு பேசிக்கலாம் உள்ள போ மா  "
    விசாலாட்சி  போலம்பிகொண்டு உள்ள போக தந்தை லட்சுமணன் உள்ள அழைக்கிறார்
    லட்சுமணன் "விச்சு உள்ள வா டா  மீனாட்சி நீ உள்ள பொய் ரெஸ்ட் எடு மா"
    மீனாட்சி அறை உள்ள சென்றதும்
    லட்சுமணன் "என்ன ஆச்சு விச்சு "
    விச்சு "மீனாட்சி  கருப்பை வீக்கா இருக்குதாம் அதுனால அவ கருவ கலைக்க வேண்டியது ஆகிடுச்சு "
    லட்சுமணன் "சரி அவள சமாதான படுத்து நாளைக்கு பேசிக்கலாம் "
    விச்சு சரி என்று உள்ளே சென்றான்  

    விச்சு அவளை சமாதானம் செய்தான் இருந்தாலும் மனதில் அந்த வருத்தம் ஓட்டி கொண்டு தான் இருக்கும் அவளும் அதை விட்டு வெளிவர முயற்சி செய்தால் ஆனால் முடியவில்லை வாரங்கள் கடந்தன ஆனால்  விசாலாட்சி ஆதங்கம் தீரவில்லை



    ஒருநாள்  விச்சு வெளியே போகலாம் வா என்று மீனாட்சியை அழைத்தான்
    விச்சு "வெளியே போகலாம் வா "
    மீனாட்சி "உங்ககிட்ட ஒரு விசியம் பேசணும்  "
    விச்சு "சரி வெளிய போய் பேசலாம் "
    விச்சு அவளை கடற்கரை அழைத்து சென்றான்
    விச்சு "எதோ பேசணும்னு சொன்னியே சொல்லு "
    மீனாட்சி "நம்ம ஏன் ஒரு குழந்தை தத்து எடுக்க கூடாது "
    விச்சு "என்ன பேசுற நீ  இது எல்லாம் நம்ம வழக்கத்துல இல்ல இத யாரும் ஒதுக்க மாட்டாங்க "
    மீனாட்சி "ஏன் ஒதுக்க மாட்டாங்க நாம் ஒன்னும் கொலை பன்னால ஒரு குழந்தைய தான் தத்து எடுக்குறோம் அதுல என்ன தப்பு இருக்கு  . நமக்கு கடவுள் குழந்தை வரம் தன் கொடுக்கல நம்ம ஒரு குழந்தைக்கு தாய் தந்தை பாக்கியம் கொடுப்போமே  "

    விச்சு "இதுக்கு நா சரி சொன்னாலும் அம்மா அப்பா ஒதுக்க மாட்டாங்க அவங்க ரொம்ப பழைய காலத்து ஆளுங்க குலம் கோத்திரம் பாக்குறவங்க வேற்று குடும்பத்து ஆள குடும்பது எத்துக்க மாட்டாங்க  "

    மீனாட்சி "உங்க குலம் கோத்திரம் எல்லாம் பிறக்கும்  பச்சை குழந்தைக்கு தெரியாது நம்ம தான் அவங்கள மாத்துறோம்  சரி நா இப்போ குழந்தை பெற்றால் என்னுடைய குழந்தை யாருன்னு ஒரு டாக்டர் சொல்லி தான் தெரியுது அப்போ வேற குழந்தை மாத்தி  கொடுத்துடா என்ன செய்விங்க  சொல்லுங்க "
    விச்சு "இருந்தாலும் கொஞ்சம் குழப்பம்மா இருக்கு "
    மீனாட்சி "சரி நீங்க யோச்சிட்டு சொல்லுங்க இப்போ போலாமா "

    ஒரு வாரம் தன் அப்பா அம்மாவிடம்  எப்படி சொல்லுவது என்று யோசித்தான் விச்சு தன் அம்மா அப்பாவிடம்  உங்களுடன் கொஞ்சம் பேசணும் என்றான்.

    விசாலாட்சி லட்சுமணன் "என்ன பா சொல்லு "
    விச்சு "நானும் மீனாட்சியும் ஒரு குழந்தை தத்து எடுக்கலாம்னு முடிவு செஞ்சி இருக்குறோம் நீங்க என்ன சொல்லுரிங்க  "

    விசாலாட்சி "இது நாம குடும்பத்துக்கு சரி பட்டு வராது  நீ வேண்ணும்னா வேற டாக்டர் கிட்ட கூட்டிடு போ எவ்வுளவு செலவு ஆனாலும் சரி பாத்துக்கலாம்   "
    லட்சுமணன் "என்ன பா  இப்படி சொல்லுற  நம்ம சொந்த பந்தம் எல்லாம் என்ன சொல்லுவாங்க வேண்டாம் பா  "
    விச்சு "இல்ல அப்பா நல்ல யோச்சிட்டேன் இது தான் சரி னு படுறது யார் வேணாலும் என்ன வேணாலும் சொல்லிடு போகட்டும் அவங்க கடைசி வரைக்கும் கூட வர போறது இல்ல உங்கள பாத்துக்க நாங்க
    இருக்குறோம் எங்க ரெண்டு பேர பாத்துக்க யார் இருப்பா நீங்களே சொல்லுங்க  "
    விசாலாட்சி  "என்னால இத ஒதுக்க முடியாது  "
    லட்சுமணன் "அவன்  முடிவு பண்ணிட்டான் இனி அவன மாத்த முடியாது விசாலாட்சி இது அவன் வாழ்க்கைய  அவன் பாத்துப்பான்   "
    விவாதங்கள் நீண்டன முடிவில்
    விசாலாட்சி  "என்னக்கு இது பிடிக்கல  "
    லட்சுமணன் "சரி பா நீ ஆகா வேண்டிய வேலைய பாரு ".
    விச்சுவும்  மீனாட்சியும்  குழந்தை தத்து எடுக்க நண்பர் டிரஸ்ட் அழைத்து  குழந்தை தத்து எடுப்பது பாற்றி விவரம் சேகரித்தனர் . குழந்தை தத்து எடுத்தனர் அவள் ஒரு பெண் குழந்தை  தத்து எடுத்தால் குழந்தைக்கு  ஸ்ரீநிஷா  என்று பெயர் வைத்தல் எல்லாம் மாறினாலும்  விசாலாட்சி கோவம் போகவில்லை மாதங்கள் கடந்தன  தன் குழந்தை முதல் பிறந்த நாள் விழா உறவினர் அனைவருக்கும்   அழைப்புகள்
    வீடு தேடி சென்று அடைந்தது . ஸ்ரீ நிஷா பிறந்த நாள் விழா கலை கட்டியது.விசாலாட்சி குழந்தையை தூக்கி பார்த்தது கூட இல்லை அன்று  அனைவரும் குழந்தை தூக்கி கொஞ்சும் அழகு விசாலாட்சி மனதை
    நெகிழ செய்தது யாரோ ஒருவர் குழந்தையை விசாலாட்சியிடம்  கொடுத்து விட்டு அருகில் இருப்பவரிடம் பேச தொடங்கி விட்டார்   கையில் இருக்கும் குழந்தை சும்மாவா இருக்கும் அவளிடம் அழ தொடங்கியது பின் அதை நிறுத்த விசாலாட்சி விளையாட்டு காட்ட ஆரமித்தால் குழந்தை தன் கழுத்தில் இருக்கும் ஒரு தங்க சங்கிலி ஒன்றை எடுத்து குழந்தை கழுத்தில் போட்டாள் .குழந்தை யாரிடம் இருக்கிறது என்று மீனாட்சி கேட்க குழந்தையுடன் வந்தாள்  விசாலாட்சி . லட்சுமணன் விக்னேஸ்வரன்(விச்சு ) மீனாட்சி ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் திகைத்து  நின்றனர். குழந்தையுடன் மேசை அருகில் சென்று வாங்க கேக் வெட்டலாம் என்றாள்.
    விசாலாட்சி மீனாட்சி அருகில் சென்று மன்னிப்பு கேட்டாள்.
    விசாலாட்சி “என்ன மன்னிச்சிடு மீனாட்சி”
    மீனாட்சி " என்ன அத்த பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு கடவுள்
    என்னக்கு தான் குழந்தை வரம் தான்  கொடுக்கல அந்த குழந்தைக்கு தாய் தந்தை வரம் கொடுக்கல அதுனால நம்ம தான் நம்மலால முடிந்த வரை அடுத்தவங்களுக்கு உதவனும் இன்னைக்கு நம்ம இந்த  குழந்தைக்கு அப்பா அம்மா பாட்டி தாத்தானு எல்லாரும் இருக்குறோம்  "
    பின்பு குழந்தையின் பிறந்த நாள் விழா  முடியும் வரை குழந்தை விசாலாட்சி  யாருக்கும் கொடுக்கவில்லை . மீனாட்சி ஸ்ரீநிஷாவை  தூங்க கூட்டிட்டு போக வந்தாள் மீனாட்சி "பாட்டிக்கு ஒரு முத்தம் கொடு " என்றாள் . விசாலாட்சி மணம்  நெகிழ்ந்தால் .
     கடவுள் மீனாட்சிக்கு குழந்தை வரம்  கொடுக்க மறந்தார் அதனால் மீனாட்சி அந்த குழந்தைக்கு வரம் கொடுத்து விட்டால் .

                         வரம்
                    கடவுள் கொடுக்க மறக்க
                      மனிதன் கொடுத்தது
                        
                         - மணி
        





       

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக