• இந்த வாழ்க்கை ஏனோ



    கடிகாரம் முற்கள் கூட
    வேகமாக சுழல
    மறுப்பது ஏனோ

    ஒரு நொடியும்
    ஒரு யுகமாக
    மாறுவது ஏனோ

    கண் நீரில் வாழ்கிறேன்
    கண்ணீரும் வற்றி போனதே
    கண்களின்  ஏக்கம் தான்
    கானலாய்  மாறுவது ஏனோ



    முடிவு இல்லா  நிலை ஒன்றில்
    தவிக்கிறேன் தனியே
    சொல்லவும் வழி இல்லை
    மெல்ல விழுங்குகிறேன்
    இந்த வழி அது ஏனோ

    ஆசைகள் அது
    மெய்பிக்க ஆசை படுகிறேன்
    ஆசை  காற்றில் கரைவது ஏனோ


    வீதியில் செல்கிறேன் உலகம இருளுதே
    விதி வெல்ல நினைக்கிறன்
    விதி வென்றது என்னை
    விதியுடன் செல்கிறேன்
    இந்த நரக வாழ்க்கை ஏனோ

    இந்த நிலை மெல்ல மாறும்
    என்ற மூட நம்பிக்கை வாழ்கிறேன்
    இந்த வாழ்க்கை ஏனோ

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக