• நட்பும் காதலும் -சிறு கட்டுரை

    நட்பும் காதலும் -சிறு கட்டுரை

    நட்பு ,காதல்  உலகில் அதிகம் உச்சரிக்கும்  வார்த்தை
    இந்த இரண்டு உறவுகளுக்கும் பொதுவான ஒன்று அன்பு
    ஒரு ஆண்  பெண் நட்பு எப்போது அன்புயின்  எல்லையை கடந்து
    பயணிக்கிறதோ அது காதல் .

    உலக  சினிமா மற்றும் இந்திய சினிமாவில் காதல்,நட்பு   வைத்து
    படங்கள் அதிகம் வெளிவந்து   இருக்கும் . இந்த இரண்டு உறவுகள் பற்றி வரலாறு கூட அதிகம் சொல்லும் .

    ஒரு ஆண் ,பெண்  காதல்  கொண்ட பின் தன்  காதலால்  நண்பர்களை
    சில தருணங்களில் இழகின்றனர் .காதலால் நட்பும் பிரிந்ததும் இல்லை
    நட்பால் காதல் பிரிந்ததும் இல்லை காதல் அல்ல நட்பு பிரிவதின் காரணம்
    "அன்பு ".

    ஆறு பேர் கொண்டு நண்பர்கள் அதில் ஒருவன்/ஒருத்தி  காதல் வயப்பட்டால்
    அவன்/அவள்  தன் முழு சுதந்திரம்  இழக்கிறான் . தன்  நண்பர்கள் செலவு செய்யும் நேரம் குறையும் இது காதலால் தான் என்று சொல்ல இயலாது
    தன் அருகில் இருக்கும் நண்பர்கள் அல்லது வேறு ஒருவரோ மீது  கவனம்
    ஈர்த்தால் அப்போது  அவளுக்கு/அவனுக்கு  முக்கியத்துவம் அதிகம் கொடுக்க படுகிறது . இது மனிதனின் இயல்பு .அவன்/அவள் பற்றி அறிய தோன்றும் .
    அவர்களோடு அதிகம் நேரம் ஒதுக்க தோன்றும் . அவன்/அவள் தன்னிடம் தான்  பழக வேண்டும் என்ற மனநிலை மாறும் இதன் விளைவில் சிலரோடு பேசும்  நேரம் குறையும் .ஒரு சில நேரங்களில் தன்னிலை அறியாது  நடந்து கொள்வர்.

    காதலால்  நட்பு  மறைந்து   போகாது  சற்று  விலகி இருக்கும் 
    நட்பு நண்பனின் காதலை புரிந்து கொள்ளும் அனால் காதல்  நட்பை புரிந்து கொள்வது கடினம்.தன் பருவகாலம் ,இளமை காலம்  இதில் நட்பு வாழ்க்கையில்  நிறைய கற்று தந்து இருக்கும். நட்பு எதிபார்க்கும் எதிர்பார்ப்புகள் குறைவு ஆனால் காதல்  எதிபார்க்கும் எதிர்பார்ப்புகள் அதிகம்.
    நட்பு கொண்ட சில இயல்புகள் காதலில்  இயல்பு . நட்பில் இருந்து காதல் தோன்றினால்  காதல் சற்று அழகாக இருக்கும் .

    காதலால் இழந்த சுதந்திரம் என்று சொன்னால் கேலி பேச்சிற்கு சொல்லி கொண்டே போகலாம் .காதலில் சில வரையரையுடன்  நட்புடன்  கை கோர்த்து வாழ்ந்தால் வாழ்கை இனிமை பெரும்

    சில திடீர் அன்பு என்ற பெயரில் காதல் என்று சொல்லி  பெற்றோரை உதறுகின்றனர், "தாய் போல் காதலி வேண்டும் " என்று சொல்லி பின்பு ஒரு தருணத்தில் தாயை உதறுகின்றனர் .

    இதற்கு முந்தைய தலைமுறைகள் நட்பு ,காதல் இரண்டையும் சற்று தூரம் வைத்து தான்  பார்த்தது .என்றும் நட்பு சுமை தாங்கும் பூமியை போல காதலை சுமந்து தான் செல்லும் .நட்பு இன்றி காதலும் இல்லை ,அன்பு இன்றி நட்பு காதலும் இல்லை இவை முன்றும் இன்றி வாழ்க்கையும் இல்லை

      -மணிகண்டன் அண்ணாமலை





1 கருத்துக்கள்:

  1. Sowndar Raja Rao சொன்னது…

    நட்புக்கும் காதலுக்கும் உள்ள உறவை நன்றாக சொல்லிருகிறாய்.

கருத்துரையிடுக