மண்ணில் மனிதன் முதல்
நுண் உயிர் வரை
உலகம் என்று
படைத்தான்
அதை கொன்று தனக்கென
ஒரு உலகம் படைத்தான் மனிதன்
பிறக்கும் போதே சிசுவின் விதி
எழுத படுகிறது பெற்றோரால்
கண் திறக்கும் நேரம்
ஒரு சிசு உறவினர் என்ற மூடர்களால்
வரவேற்கபடுகிறது
ஒரு சிசு கண்ணீர் மலுக
யான் பெற்ற செல்வம்
உலகில் எப்படி வாழும் என்று
தாயால் வரவேற்கபடுகிறது
ஒரு சிசு தாய் அருகில்
தாய் செய்யும் தொழிலுக்கு உதவுகின்றது
ஒரு சிசு புத்தும் புது
ஆடையுடன் பாரதம் கற்க போகிறது
வான் தொடும் உயரம்
மின்னும் விளக்குகள்
வேடிக்கை பார்க்கிறது ஒரு சிசு
விலை அறியாது உள்ளே
உண்ணும் ஒரு சிசு
விழித்து இருப்பவன் இரவுகள் நீண்டன
ஒருவன் பசியால் விழித்தான்
ஒருவன் தான் மகிழ விழித்தான்
சாதி தகுதி பணம்
என்று பிரிக்க பட்டு
ஒருவேளை உணவுடன்
தண்ணீர் அறுசுவை பானம் போல்
பருகி வளரும்
ஒரு சிசுவால் , தன் கவலை
எழுத வேண்டிய கடிதம்
எழுத தெரியாததால்
வெள்ளை காகிதமாய் கடவுளுக்கு
வானில் பறக்க விட்ட காகிதம்
வெள்ளை காகிதம்
- மணி
0 கருத்துக்கள்: