• தாய் பாசம்


    குழந்தை  கருவில் உதைக்க
    அதை கூட  மெதுவா ரசிக்க
    வலி கூட தனி சுகம் தானே

    இரவு எல்லாம் என் அழகை ரசிக்க
    பகல் கூட வியந்து பார்க்கும்
    என் தாய் கூட கவி சொல்லும்
    பெண் தானே

    அன்பு என்னும் இலக்கணம் கொண்டு
    பாசம் நூல்  எழுதும்   எழுத்தாளர்
    என் தாய் தானே

    தாய் மடியில் தலை வைத்து
    தாலாட்டில் உறங்கும்   சுகம்
    வேறு  எங்கும் இல்லை

    கடவுளுக்கும் பித்து பிடிக்கும்
    அந்த கடவுள் நேரில் பார்க்காத
    கடவுள் கூட  என் தாய் தானே

    தாலாட்டும் கையும்  இது தான்
    உணவுடும் கையும் இது தான்
    தாய்  பாசம்  அது  தனி  பாசம் தானே 

      
    விழி ஓரம்  கண்ணீர் சொல்லும்
    தாய் பாசம்   என்னாலுமே

    -மணி 




0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக