• காதலியே காதல் எங்கே



    வெண்மேகம் களங்கம் 
    கொண்டது  ஏனோ..... 
    களங்கம் துடைத்து 
    உன் காதல் சொல் ......


    சூரியன் மேகங்கள்  இடையே  
    மறைவது ஏனோ...
    மேகம் விட்டு வெளிச்சம் 
    தருவாயா...


    கண்ணிலும்  காதல்......
    பேச்சிலும் காதல்.......
    சிரிப்பிலும் காதல்.......
    இருந்தும் மறைப்பது ஏனோ....

    ஆயிரம் ஆண்கள் இருப்பினும் 
    நீ உணர்ந்தாய் என்னை 

    என் காதல் சொல்லிய பின்னும் 
    மார்கழியில் மலரும் 
    மலர் போல 
    நேரம் கடத்துவது ஏனோ ...


    மலர் மலர காத்து இருப்பேன் 
    என்னை ஏமாற்றாதே...

    காதலியே உன் காதல்  எங்கே.....



    -மணி 


    \

1 கருத்துக்கள்:

  1. தாமதம் கூடாது... விரைவில் நல்ல செய்தி வரட்டும்... வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக