• கண்ணீர் கண்ணீர்



    கண்ணீர்
    வாழ்கையின்
    நிலை கடக்கும்
    நேரம்
    கண்கள் தரும் பரிசு ....

    விதை விதைத்து  உரம் வைத்து
    நீர் பாய்ச்ச
    ஐப்பசி மழை  வெள்ளம் வந்து
    அறுவடை முறிக்கும்  நேரம்
    விவசாயின்   வேதனை  கண்ணீர் 

    விலைமகள் ஒவ்வொரு முறையும் 
    விலை போகும் போதும் 
    விலைமகள் மனம் சிந்தும் சூழ்நிலை கண்ணீர் 

    தாய் தன்  மகன் மகளை 
    விடுதியில் விட்டு
    செல்லும் நேரம் தாயின் பாச கண்ணீர் 

    தந்தை தன்  மகளை 
    மனம் முடித்து 
    கொடுக்கும் நேரம் 
    தந்தையின் பொறுப்பு கண்ணீர்  

    மகனுக்கு  வேலை கிடைத்த 
    செய்தி கேளும் நேரம் 
    தாய் தந்தையின் ஆனந்த கண்ணீர் 

    எதிர் பாரா வெற்றிகள்  
    தரும்  பூரிப்பு கண்ணீர் 

    காதலில் 
    தோற்றவனுக்கு 
    தனிமையில் சிந்தும் அன்பு கண்ணீர்

    கண்ணீர் மறைக்க தெரியாத கண்கள் 
    சிரிக்க தெரியாத உதடுகள் 
    வாழ்கை பாதையில் பயணிக்க இயலாது 

    புன்னகை மறைக்கும் கண்ணீர் 
    கண்ணீர் மறைக்கும் புன்னகை 
     
    கண்கள் சிந்தும் ஒவ்வொரு துளியும் 
    முத்துக்கள் கண்ணீர் முத்துக்கள்....

                     -மணி   









3 கருத்துக்கள்:

  1. /// புன்னகை மறைக்கும் கண்ணீர்
    கண்ணீர் மறைக்கும் புன்னகை ///

    அருமை... வாழ்த்துக்கள்...

  2. Unknown சொன்னது…

    கவிதையின் ஒவ்வொரு வரியும் சிறப்பு ...
    நன்று...

  3. பாராட்டுக்கள் . வலைப்பூ மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது . வாசிக்க எளிதான எழுத்துருக்கள் . இரண்டு மிக முக்கிய காரணங்களுக்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒன்று இன்றைய இளைய தலைமுறை த்மிழ் இலக்கியத்தைவிட்டு வெகு தூரம் விலகிச செல்கிறதே என்ற கவலை இருந்தது நாங்கள் இருக்கிறோம் என்று முன் வந்து இருக்கிறிர்கள் . இரண்டு விவேகானந்தரின் வரிகளை மெய்பிப்பது போல உங்கள் மனம் விரிவடைந்து இருக்கிறது. என்பதால்தான் கவிதை எழுத முன் வருபவர்களுக்கு எல்லாம் உங்கள் வலைப்பூவை திறந்த புத்தகமாக் வைத்து இருக்கிறிர்கள். இரண்டுமே மிக அபூர்வமான பண்பு . தொடருங்கள்.
    இந்த கவிதையில் எனக்கு பிடித்தமான வரிகள்
    கண்ணீர் மறைக்க தெரியாத கண்கள்
    சிரிக்க தெரியாத உதடுகள்

    வாழ்க்கை பாதையில் பயணிக்க இயலாது ... மிக யதார்த்தமான இயல்பான வரிகள் . கவிதைக்கு இது போன்ற யதார்த்தமான வரிகள்தான் பேரழகு வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக