குழந்தைகளின் மழலை மொழி
கற்க ஆசை
மழையில் நனைந்து
மழையை ரசிக்க ஆசை
மழையில் நனைந்து
ஐஸ் கிரீம் சாப்பிட ஆசை
மழையில் நின்று
கண்ணீர் கறைக்க ஆசை
மழை விட்டு மரக்கிளையில்
மீதமுள்ள சாரல் தொட்டு
விளையாட ஆசை
ரயிலில் கதவு ஓரம் நின்று
பயணம் செய்ய ஆசை
மார்கழி காலை பனியில்
சைக்கிள் ஓட்ட ஆசை
நதி கரை ஓரம்
மர வீடு கட்டி
காதலியுடன் வாழ ஆசை
தாயின் மடியில் உறங்க ஆசை
உயிரே
தாயின் மடியில் உறங்கும் போது
பிரிய ஆசை
ஆசை ஆசை தீரா ஆசை
மண்ணில் புதையும் வரை குறையா ஆசை
மண்ணில் புதைந்த பின்னும் மறையா ஆசை
-மணி
அருமை.. சின்ன சின்ன ஆசைகள் அருமை... பாராட்டுக்கள்...
முடிவில்... என்றோ எழுதிய பதிவும் ஞாபகம் வந்தது... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி...
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_14.html