• முதல் கணம்

    கற்பப் பையில் இருந்து வெளியே வர
    துடிக்கும் குழந்தை போல
    கருமேகத்தில் இருந்து வர
    காத்து இருக்கும் தேன் துளிகள்.....
    ஒர்  இடி  மண்ணை  தொட்டது தேன் துளிகள்
    பஞ்சம் பிழைக்க மன்னனை நாடிய பரதேசி போல
    மரத்தடியில் தஞ்சம் அடைய
    கோலுசு ஓசை !!!
    கண் தேட
    தேன் துளிகள் ருசிக்கும் ஒரு தேவதை....
    இமை சிமிட்டா கண்கள்
    மெய்காண   கருவிழிகள் பதற
    சிதறியது என் இதயம்
    அவள் முகம் கண்டு
    அதிகாலை சூரிய ஒளிக்கு காத்திருக்கும்
    மொட்டு போல நான் மலர்ந்தேன்
    முதல் கணமே என்னை இழத்தேன் ................

     - மணி

3 கருத்துக்கள்:

  1. Unknown சொன்னது…

    super da.nice......

  2. Sowndar Raja Rao சொன்னது…

    உவமையை சரியாக பயன்படுத்தி இருக்கிறாய்!!!!
    நன்றாக இருக்கிறது!!!

  3. பெயரில்லா சொன்னது…

    நன்றி

கருத்துரையிடுக