• ஈரம்

    உன் பாதம் பட்ட இடம் கூட
    இங்கு  மலராய் மாறியதே
    நீ   சொன்ன  வார்த்தை மட்டும்
    மனதில் நீங்கா சுவடாய்  மாறியதே
    பாறையில் பட்ட மழை துளி போல
    என்  மனதில் காதலை உதிர்த்து போனாய்
    காதல் விதையை மனதில் விதைத்து 
    நீயே கிள்ளி எறிந்து
    மனதில் வலியை தந்தாயே
    புதிதாய் பூத்த பூவாய் என்னை தலையில் சூடி
    உலர்ந்த பின் மண்ணில் வீசி போனாய்
    காற்றை போல நினைவுகள்
    என்னை சுற்ற
    உன்னோடு இருந்த நாட்கள் வானவில் போல
    ஆனால்  இன்று
    பாலைவனத்தில் காணல் தேடும்  வழிபோக்கன் 
    காதல் மழையே
    மண்ணிண் ஈரம் தனியும் முன்னே
    மண்ணை விட்டு சென்றாயே.......
    காதல் வலியே என்னை கொன்றுவிடு
    மனதின் ஈரம் குறையும் முன்னே கொன்றுவிடு
    காதல் பெயரால் என்னை மனதை சிதைத்தாயே
    இனியும் உன்தன் காதல் வேண்டாமே..........


    -மணி




                                       

1 கருத்துக்கள்:

  1. Sowndar Raja Rao சொன்னது…

    emotional poem.....
    nice...

கருத்துரையிடுக