வெறுப்பதற்கு எதுவும் இல்லை
நேற்று வந்த கோபம்,
செய்த செயல், வன்மம்,
திமிராய் பேசிய பேச்சு,
இன்று வெறுப்பாக மாறலாம்
நாளை ஒரு துளி கண்ணீர்
வெறுப்பை கரைக்கும்
இங்கே வெறுப்பதற்கு எதுவும் இல்லை.
மதம் சாதி இனம் நிறம் பாலினம் சார்ந்த வெறுப்புகள்
ஒரு உயிர் பிரிவால் மறந்து விடலாம்
இழப்புகள் வெறுப்பை சரி செய்யலாம்,
ஒரு உயிர் பிறப்பில் மாறி விடலாம்
தலைமுறை கடந்து புரிதல் கொண்ட மானிடர்
அன்பின் ஊற்றில் வெறுப்புகள் நிலைப்பது இல்லை
இங்கே வெறுப்பதற்கு எதுவும் இல்லை.
வெறுத்து ஒதுக்கிய ஒருவர்
உங்கள் நினைவுகளை தீண்டி
மீண்டும் உங்களை நேசிக்கலாம்,
வெறுத்து ஒதுக்கிய ஒருவரை கூட
மீண்டும் நீங்கள் நேசிக்க நேரலாம்,
இங்கே வெறுப்பதற்கு எதுவும் இல்லை.
சிறிய உலகில் வெறுத்து கொண்டு
எங்கே செல்வது
சுற்றி சுற்றி ஒரு இடத்திற்கு
வரும் நேரம்
வெறுப்பு வெற்று காகிதம்,
இங்கே வெறுப்பதற்கு எதுவும் இல்லை.
வெறுத்து வெறுத்து
சலித்து போக ஒரு காலம் வரும்
இனி வெறுக்க என்ன இருக்கு
நூறு சதவிதம் வெறுக்கவும் முடியாது
நூறு சதவிதம் காதலிக்கவும் முடியாது
காலம் மாறும் மாற்றம் வரும்
மனித நேயம் கொண்டு
அன்பால் வெறுப்புகள் அகற்றினால்
இங்கே வெறுப்பதற்கு எதுவும் இல்லை.
0 கருத்துக்கள்: