• மீண்டும் காதலிப்போம்

    மீண்டும் காதலிப்போம்




    வேகமாக  சென்ற நாட்கள்
    ஏனோ நாம்  நம் 
    நினைவுகளுடன் நிற்கிறோம் 
    இந்த வாழ்க்கை இயல்பாய் நகர
    வா மீண்டும்  காதலிப்போம்.

    தினம் தினம் வரும் நினைவுகள்
    திகைத்து நிற்கும் மனது,
    பிரிந்து சென்றோம்
    விரும்பியே பிரிந்து சென்றோம், 
    மனம் விரும்பி பிரிந்து சென்றோமா ?
    வா மீண்டும் காதலிப்போம். 

    இன்றே வா
    இந்த உலகம் வியக்க
    இறுதி மூச்சு வரை
    இன்னல்களை இணைந்தே  எதிர்கொள்ள
    காதலின் சக்தியில் வெல்வோம்
    வா மீண்டும் காதலிப்போம்.

    நேற்று இழைத்த தவறுகளை 
    இன்றே சரி செய்து
    நாளை இழைக்காமல் 
    புரிதல் கொண்டு வாழ்வோம்
    வா மீண்டும் காதலிப்போம்.

    கனவுகள் பகிர்ந்து
    கனவுகள் மெய்பட 
    கண்ணில் ஒரு ஓரம் கண்ணீர் சிந்த
    உச்சம் தொடுவோம்
    வா மீண்டும் காதலிப்போம்.

    உறவுகள் சேர்த்து
    உணர்வுகள் கோர்த்து
    உறவுகள் சேர்ந்து
    உலகம் பார்க்க 
    வா மீண்டும் காதலிப்போம்.

    ஆசைகள் மறைத்து
    காதலை தியாகம் செய்து
    வாழும் வாழ்க்கை யாருக்காக
    மகிழ்வித்து மகிழ
    வா மீண்டும் காதலிப்போம். 

    நீ வரும் நாள்
    வெகு தொலைவில் இல்லை,
    நீயும் நானும்
    கண்ணீரும் புன்னகையும்
    காதலும் நாமும்
    மீண்டும் தொடர
    வா காதலிப்போம். 



      

1 கருத்துக்கள்:

  1. பெயரில்லா சொன்னது…

    அருமை

கருத்துரையிடுக