• பேரன்பு – உணர்வுகளின் தொகுப்பு

    பேரன்பு – உணர்வுகளின் தொகுப்பு


    பேரன்பு கிடைக்க பெற்றவர்கள் எல்லோருமே அதிர்ஷ்டசாலிகள் பாக்கியசாலிகள் தான். அந்த பேரன்பு வெளிபடுத்துவோர் எல்லோருமே உன்னதமான மனிதர்கள். இந்த உலகில் அன்பிற்காக ஏங்கும் மனிதர்கள் ஏராளம், முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு தாய் மகனின் அன்பிற்கும் அவர்கள் பேரக் குழந்தைகள் மீது அன்பு செலுத்த முடியாமல் இருப்பதும், தந்தை/தாய் இழந்த குழந்தைகள், வீட்டில் ஒற்றை மகன்/மகள் உடன்ப்பிறப்பு இல்லாதவர்க்கும் என பல உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம் இங்கு அன்பிற்காக எங்கும் உயிர்கள் ஏராளம். அதிலும் பேரன்புக்கு ஏங்கும் உயிர்களும் உண்டு.

    மம்மூட்டி, மூளை முடக்கு வாதம் கொண்ட பெண் குழந்தையின் அப்பா. ஒரு சில காரணங்களால் தாய் அந்த குழந்தையை விட்டு  1௦ வயதில் பிரிந்து செல்கிறாள் பின்பு அப்பா என்ற ஒற்றை உறவுடன் பாப்பா என்ற பெண் குழந்தை தன் வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் எப்படி பயணிக்கிறாள், அவள் தேடும் பேரன்பு எங்கு எப்போது கிடைத்தது என்பதே பேரன்பு திரைபடத்தின் கதை. படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார். பாப்பாவாக சாதனா வாழ்ந்து இருக்கிறாள். இசை இன்னும் படத்தை மெருகேற்றி இருக்கிறது. ஒளிபதிவு கதையுடன் பயணிக்க வைக்கிறது. இயற்கையின் அத்தியாயம் என பன்னிரண்டு அத்தியாயம் கொண்டு கதை நகர்கிறது. யாரும் சொல்ல முன்வராத கருத்துகளை ஒரு துணிச்சலுடன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பேரன்பு நவரசமும் உள்ளடக்கிய கதை.       

    பேரன்பு திரைப்படம் நமகுள்ளே பல கேள்விகளை உண்டாக்கும். ஒரு சில படங்கள் மட்டுமே இங்கு திருநங்கைகளின் உணர்வுகளை சரியாக காட்சிபடுத்தப்பட்டு இருக்கும் அதில் பேரன்பிற்க்கும் ஒரு தனி இடம் உண்டு. திருநங்கைகளின் உணர்வுகளை என்றாவது புரிந்து கொண்டு இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. அவர்களில் சிலர் நல்ல பதவியில் இருந்தாலும் நமக்கு சற்று என்று நினைவில் வருவது அவர்கள் பிச்சை எடுப்பதும், இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்வதும். இதற்க்கு காரணம் யார் ? ஒரு திருநங்கையை பாலியல் தொழில் இருபதற்கு காரணம் காமவெறி பிடித்தவர்கள் தான் இப்படி அவர்கள் நிலையின் காரணம் கண்டு அறிந்தால் இந்த சமூகம் தான் காரணம் என்று வந்து நிற்கும்.    

    நாம் ஏன் அடுத்தவர் நிலையில் இருந்து யோசிக்க விரும்பவது இல்லை? அப்படி யோசிக்க நாம் நம் சிந்தனைகளை நெறி படுத்துகிறோமா அல்லது நாம் அவர்களை ஒரு நிமிட அனுதாப பார்வையில் கடந்து விடுகிறோம் என்பதால் விட்டுவிடுகிறோமா? அப்படி அடுத்தவர் நிலையில் இருந்து யோசித்தால் இந்த உலகம் பேரன்பில் மூழ்கிவிடும். ஒருவர் தன் இயலாமை சொல்லும் பொழுது  நாம் அனுதாபம் கொள்கிறோம் ஆனால் அவர்கள் நிலையில் இருந்து யோசிப்பது சிலர் மட்டுமே. என்ன செய்வது இங்கு அனுதாபம் கொள்வதே உச்சகட்ட மனிதநேயம் என மாறி வருகிறது. அவர்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வதால் அவர்களும் இந்த உலகில் சாதாரணமாக வாழ்வார்கள். இந்த உலகில் ஏதோ ஒரு குறையுடன் வாழும் மனிதர்கள் ஏராளம் உண்டு. ஆனால் அவர்களை புரிந்துக்கொண்டவர்கள் சிலர் மட்டுமே. அவர்களின் குறையை எப்போதுமே அவர்கள் நினைத்து கொண்டே வாழ்வது இல்லை, அவர்களால் பிறரை புரிந்து கொள்வதும், அவர்களுடன் சேர்ந்து பேரன்புடன் பயணிக்கவே விரும்புகின்றனர். ஏனோ அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப்படுகின்றார்கள். அந்த தனிமையின் தீர்வு தான் பேரன்பு.

    அந்த பாப்பா குழந்தை எப்படி தினம் தினம் தன் வேலைகளை தானாக செய்கிறது. அந்த குழந்தையை போல் உள்ள குழந்தையை எப்படி புரிந்து கொள்வது என்பதே இங்கு பெரிய கேள்விக்குறி. அவர்களின் உலகம் வேறு ஆனால் அவர்களுக்கும் சக மனிதர்கள் போல உணர்வுகள் உண்டு என்பதே இயக்குனர் ராம் உணர்த்தும் கருத்து.

    பேரன்பு நல்ல படம் தான், உணர்ச்சி பூர்வமான கதை ஆனால் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை ஏற்க்க காலம் தேவைப்படும். இங்கு கதையில் கமர்சியல் இல்லை என்றால் படம் ஓடுவது இல்லை ஒரு சில படங்கள் மட்டுமே மக்களை சென்று அடைகிறது. பேரன்பு போன்ற உணர்வுகள் வெளிக்கொண்டு வரும் படங்கள் மக்களை சென்றடைய நேரம் எடுக்கிறது. காரணம் கதை இயல்பாக இருந்தால் திரைக்கதை மெதுவாக தான் நகரும் என்பதை ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். கலை என்பது வெறும் நகைச்சுவை, வன்மம், காதல்  என சில விசியங்கள் சார்ந்தது மட்டும் அல்ல நம் உணர்வுகளுக்கு அங்கு வேலை உண்டு என்பதே உண்மை. சினிமா ரசிகர்கள் பலர் எதார்த்த கதைகளை விரும்புவது இல்லை. பேரன்பு தமிழ்சினிமாவின் ஒரு பொக்கிஷம்.  



                

      

               
        


        

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக