• தெருகூத்து

    தெருகூத்து




    இன்றைய சினிமாவின் முதல் படி தெருகூத்து என்பதே நிகர் இல்லாத உண்மை.இன்றைய சினிமா பற்றி சற்று  உற்று நோக்கி பார்த்தால் நல்ல கதை கருவாக  கொண்ட படம் என்பதே குறைவு இல்லையென்றால் நல்ல கதை கொண்ட படைப்பாளிகள் வாய்ப்புகள் கொடுக்க படுவது இல்லை என்பதே உண்மை. இதை தகர்த்து சிலர் மட்டுமே நல்ல படங்களை தருன்கின்ற. ஒரு படத்தின் கரு நல்ல கதை இருந்தாலும் அதில் நடிப்பவர்கள் நடிப்பு ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.அந்த நடிப்பை கற்று கொள்வதற்கு பல பல்கலைக்கழகம் இருந்தாலும்கூட ஒரு சிலர மட்டுமே நடிப்பதில் வல்லமை பெறுகின்றனர்.சிலர் வருகின்ற வழிகள் வேறுபட்டாலும் அவர்கள் நடிப்பு எடுபடுவதில்லை.

    ஒரு நடிகன் தன்னை திரையில் அதிரடியாக தான் அதிகம் பார்க்க ஆசைப்படுகிறான் ஆனால் நடிப்பில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்பதே உண்மை.இதற்கு விதி விலக்காக தான் சிலர நடித்து வருகின்றனர்கள். அந்த புகழ் தேடும் அதிரடி நடிகன் தான் அடித்தால் பத்து பேரு பறந்து விழவேண்டும் என்றும் மட்டுமே யோசிக்கிறான் ஆனால் அப்படி நிஜ வாழ்க்கையில் நடக்க போவதும் இல்லை. ஒரு படத்தில் ஒரு கட்சியில் நடிப்பதற்கு பல முறை ரீஹீர்சல் பார்க்கிறான் பின்னர் படப்பிடிப்பில் பல டேக் எடுக்கும் சிலர்,பின்னர் அதற்கு ஒரு டப்பிங் செய்கிறான். இத்தனை வேலைக்கு பிறகே ஒரு படம் வெளி வருகிறது.

    சரி ஒரு நடிகன் விட தெருகூத்து கலைஞன் ஒசத்தி என்றால் அதுவே உண்மை. ஒரு நடிகன் அவனை வளர்த்து கொள்ள நடிப்பு கற்று கொள்கிறான். ஒரு சிலர் மேடை நாடகம் போடும் இடத்தில் இருந்து  நடிப்பு கற்று கொன்று வருவார்கள் சற்று தனித்தே சினிமாவில் தெரிகின்றனர். ஒரு தெருகூத்து கலைஞன் அந்த கலையின் மீது கொன்ற பற்று அவனை இன்னும் உற்சாக படுத்தும். அந்த கலைஞன் எளிதில் மக்கள் முன்பு தோன்ற முடியாது, எத்தனை முறை அந்த நாடகத்தை ஒத்திகை பார்த்து இருப்பான்.,அதற்கு முன்பு அந்த கலை கற்க எவ்வளவு உழைத்து இருப்பான். வெறும் நடிப்பு மட்டும் போதாது அவர்களே நடிக்கவும் வேண்டும் அதே சமையும் பாடல்களும் உண்டு. அதை ஒருவான் சரியாய் மக்கள் முன்னால் வெளி படுத்தினால் மட்டுமே ஒரு கலைஞன் என்ற அங்கீகாரம் கை தட்டல் மூலம் கிடக்கும்.

    எத்தனை பக்க வசனங்கள், விடியும் வரை கூத்து. பார்க்க வந்தவர்கள் தூங்கி விட்டால் என்ன ஆகும் ?? வந்தவர்கள் ஒரு பொழுதுபோக்கு  கூத்து போல மாற்றுவது அந்த கலைஞன் தான். கூத்து ஒரு நாள் இரவு மட்டும் இல்லை தொடர்ந்து 1௦ நாட்கள் கூட நடக்கும், கூத்து சலிக்காமல் எடுத்து செல்வார்கள். அவர்கள் நடிப்பிலும் குரலிலும்  சோர்வு தெரியாது.
    மேக்கப் ,ஆடை வடிவம்பு ,அலங்காரம் , பாடல் ,உரக்க குரலில் வசனம் ,நவரசம் கலந்த நடிப்பு என அடிக்கி கொண்டே போகலாம் ஒரு கலைஞன் திறமையை.

    இன்று அந்த தெருகூத்து நிலைமை என்ன? அழிந்து வரும் கலைகளில் ஒன்று. நான் சினிமாவில் பெரிய ஆள் ஆகா வேண்டும் என்று சொல்லும் யாரும் நான் கூத்து கற்று கொள்ள வேண்டும் என்று சொல்லவதில்லை. மோகம் அப்படி யாரை குறை சொல்லுவது.

    இதை ஏன்டா இப்போ சொல்லுரனு கேட்டா அதற்கு பதில் இல்லை. youtubeயில் ஒரு குறும்படம் “கர்ண மோட்சம்”. தலைமுறை தலைமுறையாக வேஷம் கட்டும் ஒருவர் தெருகூத்து அழிந்ததால் பிழைக்க வழி இல்லாமல் ஒரு காட்சி பொருள் போல பல இடங்களில் தன் கலையை  வெளிபடுத்தி கொண்டு இருக்கிறார்.அவருடைய மகன் உடன் ஒரு நாள் நடக்கும் சிறிய தொகுப்பு.அந்த 13 நிமிட குறும்படம் பல கேள்விகள் மறைமுகமா முன் வைக்கின்றது.அதற்கு பதில் சொல்லவதற்கு பதிலும் இல்லை என்பதே உண்மை.

    கலையின் மதிப்பு எங்கே ?
    இன்று இருக்கும் இந்த கலை நாளை இருக்குமா ?
    என் மகன் நாளை இதை கற்று கொள்வானா ?
    இந்த கலையை நாளை யார் கற்க போகின்றனர் ?
    வறுமை எப்போது ஒழியும்?

    விவசாயத்தை அழிக்கும் நாடு கலை மட்டும் காப்பாத்த போகின்றதா என்ன ?


    https://www.youtube.com/watch?v=m2hnQCz_jnI -கர்ண மோட்சம் குறும் படம்.



          

                                        

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக