வருடங்கள் காத்து இருந்தேன்
காதல் வேண்டும் என்று
நீ தான் என்று
உணரவில்லை
உன் காதல் உணர
வருடங்கள் கரைந்தன
இன்று
நீ
இருந்தும்
காதல்
கரையவில்லை
யார் சொன்னார்கள்
என் காதலி அழகு
இல்லை என்று
யாரோ என்றோ
எதுவோ சொல்லுவார்கள்
நான் என்றும்
சொல்லும் அழகு சிலை
என்னுடன் வாழ்கின்றவள்
என் மீது
நீ கொண்ட காதல்
உன்னை மாற்றினாய்
ஏனோ நான்
என்னை அறியாமல்
மாறினேன்
முகத்துக்கு வண்ணம்
தீட்டும் பெண்களில்
இருந்து
சட்று தனித்து
வெளியே வந்தவள்
"நான் " தான்
உன் உலகம் என்று
மாற்றினாய்
ஏனோ நாம்
மட்டும் வாழ
ஆசைப்படுகிறேன்
உன் கோபத்தால்
நான் உடைந்தாலும்
உன்ன புன்னகை சரிகட்டவில்லை
அறியா மனம்
என் மீது கொண்ட
கோபத்தின் எதிர்வினை
உன் கண்ணீர்
என்னை சேர்த்துவிடும்
என் ஒவ்வொரு
(ஆ)அசை(யு)வும் உனக்காக தான்
என் ஒவ்வொரு
நொடியும் உன் சிந்தனை
எங்கு இருந்தாலும்
சுவாசிக்கிறேன்
தாய் காட்டும்
அன்பிற்கு ஈடு இல்லை
என்று சொன்னார்கள்
என் தாயும்
நீ தானே
யாரும் இல்லை
என்று
தனிமை உன்னை கொள்ள
நான் தான் உலகம்
என்று
உடைத்து எறிந்தாய்
உன் ஒவ்வொரு
நொடி வாழ்க்கையும்
நான் உன்னுடன்
வாழ வேண்டும்
எனக்கு என்று
உன் காதல் போதும்
என்றும் இருப்பேன்
உன் மூச்சுக்காற்றாய்
என்னை சுற்றி
ஆயிரம் துன்பம்
நேர்ந்தாலும்
உன் கைகோர்த்து
நடக்கும்போது
என் வாழ்க்கையின்
இன்பத்தின் சிகரம்
தொடுகிறேன்
என் காதலி
இன்று
நீ என்னுடன்
இல்லை என்றாலும்
என் இறுதி மூச்சு வரை
நேசிப்பேன்
Miga azhagana unarvu padhivu... 😍
நன்றி