• அடுத்த நொடியின் பயம்


    மிதமான மனம்
    காதலிக்க
    பயம்

    சேர்த்து வைத்த உணர்வுகள்
    ஒரு நாள் வெளிச்சம் பெற்றது


    என்னை அறியாமல்
    என்ன செய்ய போகிறேன்
    என்ற பயம்

    காகித கப்பல்
    கரை சேராதோ
    என்ற பயம்

    இன்பம் பல
    துன்பம் சில
    சில பலவென தோன்றியது

    என்னை  விட்டு போனால்
    என்ன  செய்வேன்
    என்ற பயம்

    ஒரு முறை முடிவு
    செய்து விட்டேன்
    இனி
    மாற்றத்துக்கு
    இடம் இல்லை

    காயம் பட்டு
    காயம் பட்டு
    உணர்வுகள் அற்று
    நிற்கிறேன்
    உணர்வுகள் மதிப்பு
    இல்லை என்ற பயம்

    மீண்டும் ஒரு காயம்
    வேண்டாம்

    யாரையும் இழக்க வேண்டாம்
    என்ற பயம்

    சில பொய்கள் உண்மை
    என்று மாறும்போது
    சரி என்று
    ஆகும்

    வாழ்க்கையின் அடுத்த
    நொடி பயம்
    என்னை பற்றி


    அடுத்த நொடியின் பயம்

                                                -மணி   

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக