• எனக்கு என்று ஒரு உலகம் வேண்டும்













    பொய் இல்லா
    மெய் நிறைந்த
    உலகம்

    தீமைகள் இல்லா தீவு
    மதி  மயங்கும் மர  வீடு
    தேவைகள் எல்லாம்
    தேடாமல் கிடைக்க
    வண்ணம் நிறைந்த
    பூக்கள் மத்தியில்
    வண்ணத்து பூச்சியாக நான்

    நேரம் வேண்டாம்
    சுழலும் பூமியின்
    நாள் கணக்கும் வேண்டாம்

    பாற்கடல் மிதக்கும்
    தீவு போல
    ஓர் படுக்கை
    சூரியனும் என்னோடு
    மெல்ல விழித்து எழும்

    இயற்கையின் உணவு
    அட்சய  பாத்திரம் போல
    கிடைக்க

    பூமி ஈரம் குறையா மழை
    காகித கப்பல்
    விட்டு ரசிக்க

    பூக்கள் கம்பளம் விரிக்க
    மரங்கள் விசைக்க
    சாரல் காற்று  வரவேற்க்க
    என் தேவதையுடன்
    கை கோர்த்து
    அவள் தோள் சாய
    கதை பேசி
    மனம் தித்திக்க
    ஒரு காதல் பயணம்
    காதலியுடன் (என்றும் காதலியாய் )

    சுற்றமும் இசை சூழ
    மதி கூட இசையில் மூழ்க
    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடம்
    ரசித்து வாழ
    எனக்கு என்று ஓர்
    உலகம் வேண்டும்
    மாய உலகம் வேண்டும்

    -மணி






1 கருத்துக்கள்:

  1. பெயரில்லா சொன்னது…

    Anaivarin aasayum adhu polathaan irukkiradhu!

    Nalla padaippu!!

கருத்துரையிடுக