மனிதனின் இயல்பும் யூகிக்கும் உணர்வு
மனிதர்கள் பிறந்த உடனே யூகிக்கும் உணர்வு உள்ளவர்கள். ஒரு குழந்தை பிறந்த சில நாட்களில் தன் தாய் யார் என்று யூகித்து கொள்கிறது .
பின்பு வளர்ந்த பிறகு தன்னுடன் பழகும் நபர்களை யூகிக்க ஆரம்பிக்கிறான் .
சிலர் சிலரை பார்த்த உடன் அவர்கள் உடை ,பாவனை ,பேச்சு இவற்றை வைத்து இவர்கள் இப்படி தான் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.சிலரது
யூகிக்கும் திறன் 1 சதவீதம் தான் சரி மற்றவர்கள் 99 சதவீதம்
தவறு தான் .
சிலர் யூகித்து அவர்களை பற்றி புறம் பேசவும் செய்கிறார்கள் அது சரியா இல்லையா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுகிறார்கள் .ஒருவன் என்றும் ஒரு நிலையில் இருப்பது இல்லை அவன் /அவள் சூழ்நிலை மாறி கொண்டே இருக்கும் நீங்கள் பார்க்கும் நேரத்தில் அவர்கள் எந்த சூழ்நிலையில் இருகிறார்கள் என்று யூகிக்க முடியாது ஆனால் அவர்கள் இப்படி தான் என்று எப்படி சொல்ல முடியும் .
ஒருவன் தான் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவரிடம் பணித்து சென்றால் அதனால் அவன் கோழை என்று நீங்கள் முடிவு செய்ய முடியாது
அவன் அவனுடைய சூழ்நிலைக்காக அவன் பணிந்து செல்ல வேண்டும் .
இதை தவறாக புரிந்து கொள்வது மனிதன் யூகம் .சிலர் ஊர் வைத்து யூகிக்கிறார்கள். இந்த ஊர் ஆட்கள் முரடர்கள் என்று யுகிக்கின்றனர்.இதை விட மோசமான ஒன்று சாதி வைத்து இடை போடுவது
யூகம் ஒரு கணிப்பு தான் அது என்றும் எப்போதும் சரியாக தான் இருக்கும் என்று சொல்ல முடியாது . ஒருவருடன் பேசாமல் பழகாமல் அவரின் இயல்பு, குணம் பற்றி சொல்ல முடியாது . ஒருவருடன் பேசி பழகியும் அவர்களால் அவரது இயல்பு பற்றி அறிய முடியவில்லை என்றால் அவர்களிடம் புரிதல் இல்லை என்பது தான் உண்மை அப்படி இருந்தும் அவர்கள் பற்றி புறம் பேசுதல் சிலரிடம் உள்ள இயல்பு.
சிலர் தான் என்ற கர்வத்தில் சிலரை புறம் பேசுகின்றனர்.சிலர் சிலரின் மீது உள்ள பொறாமை காரணம் வைத்து புறம் பேசுகின்றனர் .உண்மை யாருக்கும் யாரை பற்றியும் தெரியாது .சிலர் தன் உணர்வு எல்லாவற்றையும் தன் தாய்,தந்தை,நண்பர்கள் ,காதலியிடம் பகிர்ந்து கொள்வர்.சிலர் தன் உணர்வு
எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள் .ஒவ்வொரு மனிதனுக்கும் தனி தன்மை குணம் உண்டு .
அவன்/அவள் எந்த சூழநிலையில் இருகிறார்கள் என்று எளிதில் கண்டு அறியும் திறன் கொண்டவள் தாய் தான் .ஒவ்வொருவர் பார்வையில் ஒருவரின் இயல்பு,குணம் ஒவ்வொரு விதமாக தோன்றும் அவர்களுடன் பழகும் வரை அது உண்மை இல்லை.ஒருவரை பற்றிய உங்கள் தனிப்பட்ட கருத்துகளை உங்கள் மனதில் வைத்து கொள்வது நன்று இல்லை புறம் பேசாது இருப்பது நன்று .
பி.கு: இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இதை யாரையும் குறிப்பிடுவன
அல்ல . என் கருத்தில் தவறு இருந்தால் உங்கள் கருத்துகள் கூறவும்
-மணிகண்டன் அண்ணாமலை
அருமை
நனி நன்று!!!