• நன்றி



    சில தருணங்கள்
    கண்ணீர் நன்றி  வடிவம்
    கொள்ளும்

    சில தருணங்கள்
    புன்னகை  நன்றி  வடிவம்
    கொள்ளும்

    அன்பும் நன்றியும்
    ஒன்றியே  இருக்கும்
    வெளிப்பட சொல்வது  கடினம் 

    புது உறவுக்கு
    நன்றி இன்றியமையாத ஒன்று

    நன்றி நீடிப்பின்
    உறவுகள் வலுவிழந்து  இருக்கும்


    பெற்ற தாய்தந்தையற்கு
    நன்றி சொன்னது இல்லை

    உடன் பிறந்தோருக்கு
    நன்றி சொன்னது இல்லை

    சில  தவிர்க்க முடியா
    உறவுகளிடம்
    சொல்ல இயலாத
    வார்த்தை

    கடவுள் கூட
    யாருக்கும் சொல்லாத
     வார்த்தை

         -மணி 

2 கருத்துக்கள்:

  1. நிலாமகள் சொன்னது…

    அன்பும் நன்றியும்
    ஒன்றியே இருக்கும்
    வெளிப்பட சொல்வது கடினம் //

    சபாஷ்!
    -நிலாமகள் http://nilaamagal.blogspot.in/

  2. Manikandan Akila Annamalai சொன்னது…

    மிக்க நன்றி

கருத்துரையிடுக