• காதல்


    காதல்
    மண்ணில் பிறந்த ஒவ்வொரு
    உயிரும் உணரும்  உணர்வு

    ஆணுக்கும் பெண்ணுக்கும்
    மட்டும் தான் காதல்  உண்டா  ?

    பள்ளி செல்லும் சிறுவனக்கு
    தன் அழகிய பென்சில் பாக்ஸ்
    மீது காதல்

    கல்லூரி செல்லும் வாலிபனுக்கு
    தன் இரு சக்கர வாகனம் மீது காதல்

    ஒவ்வொரு மனிதனுக்கு  ஏதோ  ஒரு
    அசையும்  அசையா  வஸ்து
     மீது காதல்

    இசை  மீது காதல்
    இயற்கை மீது காதல்
    மண் மீது காதல்


    எழுத்தாளருக்கு எழுத்து மீது காதல்
    தாய் மொழி மீது காதல்
    வைத்து இருக்கும் பேனா மீது காதல்

    காதல் மனிதனை சுயநலவாதியாக்கும்
    தான் கொண்ட காதல்
    பிறர்  குறை சொல்ல விடாது

    அன்பின் உச்சம் காதல்

    நம்மை  முதல் முதலில் காதலித்த
    காதலிக்க கற்று  தந்த  காதலி
    தாய்

        -மணி



1 கருத்துக்கள்:

  1. அருமையாக சரியாகச் சொன்னீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக