• கண்ணீரும் மகிழ்ச்சியும்



    வாழ்கையில் சில தருணங்களில்
    கண்ணீரும் மகிழ்ச்சியும்
    காதல் வயபடும்...

    பத்து மாதம் சுமந்து
    குழந்தை பெற்று
    எடுக்கும்  தாய்......

    முதல் நாள் பள்ளி
    செல்லும் குழந்தை...

    மகள்  மணம் முடித்து
    செல்லும் தருணம்
    தாய்தந்தையர் 

    உழைப்பின் 
    வெற்றி உணரும் 
    தருணம்

    தருணம் என்ற சாவி
    கொண்டு வாழ்கை
    என்ற வீட்டை
    திறக்கும் போது
    காதல் தம்பதி  வரவேற்கும்

    அன்பு  விண்ணை தொட ( அன்பு மிகுதி ஆகும் நேரம் )
    இந்த காதல் தம்பதி
     உடன் வருவர்

    பிரிவு இல்லாத காதல்
    தம்பதி

    கண்ணீரும்  மகிழ்ச்சியும் ......

                         -மணி 







1 கருத்துக்கள்:

  1. உண்மை உண்மை வரிகள்... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக