• சாதி


    உலகத்தில்
    பிறக்கும் ஒவொரு குழந்தையின்
    குருதியும் ஓர் வண்ணம்


    சாதி கொண்டு குருதி
    பிரிப்பது இல்லை
    குருதி கொண்டு பிரிக்கிறான்

    சாதி சாதி சாதி
    தெருவுக்கு ஒரு சாதி
    ஊருக்கு ஓர் குலம்
    படைத்தவன் யவனோ ?

    உறுப்புக்கள்  ஒன்று
    உணர்சிகள் வேறு
    விளைவு ....

    கண்ணீர்.... ரத்தம்....மரணம்....

    சாதி கற்று கொடுத்தது
    கல்வி ??? பகுத்தறிவு ????

    சாதி அன்பின் கண்களை
    மறைக்கும்
    சாதியின்  ஏணி  கவுரவம்
    மனிதனை ஆகாயத்தில் மிதக்க
    செய்யும்

    மண்ணில் பிறக்கும் ஒவொரு
    மனிதன் இறுதி  இடம்
    மயானம்

    மனிதன் சாதி பார்ப்பின்
    மனிதனை சாதி விழுங்கி விடும்
    மனிதன் பகுத்தறிவு பார்ப்பின்
    மனிதன் சாதியை வென்று விடுவான்


    -மணி



     



1 கருத்துக்கள்:

  1. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்...

கருத்துரையிடுக