பேச சின்ன பயம்
பழக சின்ன தயக்கம்
தாய் சேய் உறவு பின்
நண்பன் என்பேன்
தந்தை என் நண்பன் என்று
தந்தை என் நண்பன் என்று
என் நண்பன் என் தந்தை என்று
சொல்ல ஆசை
வான் அளவு பாசம் வைத்தேன்
வானம் சிறிதானது
நீங்கள் காட்டிய பாசத்திற்கு
நீங்கள் காட்டிய பாசத்திற்கு
உங்கள் உயிர் துடிப்பில் நான்
காரணம் கேட்கும் கணம் கசக்கும் அது அக்கறை
கண்டிக்கும் கணம் வெறுப்பேன் அது பயம்
கண்ணீர் கண்டது இல்லை கண்கள்
காரணம் கேட்கும் கணம் கசக்கும் அது அக்கறை
கண்டிக்கும் கணம் வெறுப்பேன் அது பயம்
கண்ணீர் கண்டது இல்லை கண்கள்
உள்ளம் கண்டது
மனம் உணர்த்து மனம்
இக்கணம் சிக்கனத்துடன் வாழ் என்பாய்
உங்கள் உழைப்பின் வலி உணர்வேன்
தான் பெறா இன்பம்
நான் பெற நினைத்தாய்
நான் பெற நினைத்தாய்
வையகம் சொல்லும் உன் மகன்
நான் என்ற நிலை தருவேன்
பிரம்மன் படைப்பில் செல்வ மகனாய்
என் மகனாய் மலர
பிரம்மன் படைப்பில் செல்வ மகனாய்
என் மகனாய் மலர
வரம் கேட்பேன்
பாசமுள்ள மகன்
-மணி
0 கருத்துக்கள்: