• தாய் தமிழ்

    வான் நோக்கிய கோவில்
    கோபுரத்தின் சிலை கூட தமிழின்
    வரலாறு சொல்லும்

    ஆதி திராவிட மொழியாம் தமிழ்
    மூவேந்தர் சங்கம் வைத்து வளர்த்தது

    தமிழ் தந்த கலைகள் ஏராளம்
    தமிழ் புலவர் வகுத்த நெறிகள் ஏராளம்

    கலை வளர்த்த மன்னன்
    என்று வரலாற்றில் பதிந்தது

    மனிதன் தோன்றி
    நாவை அசைத்து
    பேசியது தமிழ்


    மாதம் வைத்து  காலம் கொண்டு
    வருடம் வகுத்து நாள்காட்டி
    தந்தது தமிழே

    இசை வைத்து மொழி வளர்த்தது
    இங்கு தான்

    யாழ்  பறை இசையின் அச்சாணி
    இசையை விலங்குகளின் குரலொலி
    கொண்டு ஒபிட்டது  தமிழனே

    உயிர் கொண்டு சுரங்கள் அமைத்தான்
    இணையம் தேடல்  நீண்டது
    தொல்பொருள்  ஆய்வாளர்  தேடலும் நீண்டது

    நடைமுறைகள்  மாற
    கிராமப்புறம் கண்ட தமிழ் வேறு
    நகர்புறம் கண்ட தமிழ் வேறு

    தமிழனே தாய்மொழியை  விட்டுவிட்டு
    வேற்று மொழி தேடாதே
    தாய் வணங்குவோம்
    தாய்மொழியை போற்றுவோம்

    -மணி

1 கருத்துக்கள்:

  1. Unknown சொன்னது…

    good one.. very nice..

கருத்துரையிடுக